யுவராஜ் சிங், லாராவை சேர்த்து பார்த்தது போல்.. 14 வயது பையனிடம் வாங்கிய அடியை மறக்க மாட்டேன்.. இங்கிலாந்து ஜாம்பவான்!

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அனைவரையும் தனது திறமையால் ஈர்த்துவிட்டார். சிறப்பாக விளையாடி அவர் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் தொடரில் அதிவேக 2வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்.

- Advertisement -

பட்லர் சொன்ன சம்பவம்

குஜராத் அணிக்காக எதிராக சூர்யவன்ஷி ஆட்டம் பலரையும் மிரள வைத்தது. தற்போது அந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பின் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த பட்லரும் மிரண்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பட்லர் கூறும் போது, 13 வயது பையன் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் பங்கேற்கிறான் என்ற போதே ஆர்வம் ஏற்பட்டது. அவரை காண்பதற்கு ஆர்வமாக இருந்தேன்.

- Advertisement -

அதன்பின் குஜராத் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் அநியாயத்தின் உச்சம். எங்களின் பவுலிங் அட்டாக்கை பாருங்கள்.. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் என்று தரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் கொஞ்சம் பயமின்றி சிக்சர்களை விளாசி தள்ளினார். அதுவும் சிறிய சிக்ஸ் அல்ல.. எல்லாமே பெரிய பெரிய சிக்சர்கள். அதனை அருகில் இருந்து பார்த்தேன். 35 பந்துகளில் சதம் விளாசிவிட்டார்.

- Advertisement -

யுவராஜ் + லாரா

அவரின் ஆட்டம் எனக்கு ஊக்கமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனென்றால் அந்த சிறுவன் என்னைவிட 20 வயது குறைந்தவன். அப்படியிருக்கும் போதே பவுலர்களை அனைத்து திசைகளிலும் பறக்கவிடுகிறார். அவரின் ஆட்டத்தால் கிரிக்கெட் உலகமே கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. அதன்பின் மீண்டும் சிஎஸ்கே போட்டியை கண்டேன். அந்த போட்டியில் அஸ்வின், ஜடேஜா என்று அனுபவ வீரர்களை விளாசினார்.

அதிலும் ஒரு ஷாட்டை கவர்ஸ் திசையில் அடித்து சிக்சருக்கு அனுப்பினார். அந்த ஷாட் அவர் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருப்பதை போல் அமைந்தது. என் வாழ்க்கையில் பார்த்த மிகச்சிறந்த வீரராக மாறிவிட்டார். அவரின் திறமையை நினைத்து பிரமித்துவிட்டேன். சதம் விளாசிய போது ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். யுவராஜ் சிங், பிரையன் லாராவை போல் பேட் ஸ்விங் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles