நேற்று மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக நடுவர்கள் தவறான முடிவு கொடுத்ததற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கோபமடைந்திருந்தனர். இந்த நிலையில் டாஸ் போடும்போதே ஒரு குளறுபடி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்திருந்தது. பெங்களூர் அணியில் டு பிளஸ்சிஸ் 61 ரன்களும் ரஜத் பட்டிதார் 50 ரன்களும், தினேஷ் கார்த்திக் 51 ரன்களும் குவித்திருந்தனர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 16 வது ஓவரிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நடுவர்கள் கொடுத்த தவறான முடிவுகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பெங்களூர் அணி பேட்டிங் செய்தபோது ஆகாஷ் மதுவால் தடுத்த பந்து பவுண்டரி லைனை தொட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால் நடுவர்கள் அந்த பந்திற்கு இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இதற்கு அடுத்து மும்பை அணியிடம் ரிவ்யூகள் எதுவும் இல்லாத நிலையில் டு பிளஸ்சிஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதும் பும்ரா பந்துவீச்சில் இசான் கிசான் கேட்ச் பிடித்து அவுட் கேக்க நடுவர்கள் பந்து பேட்டில் பட்டதா? இல்லையா?என்பதை பார்க்க உடனே டிவி ரிப்ளையில் சரிபார்த்தனர்.
அடுத்து தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது புல்டாஸ் ஆக வீசிய வந்து இடுப்புக்கு மேலே வந்த பந்து நோ பால் என்று தெளிவாக தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் அதை நோபால் இல்லை என்று அறிவித்து விட்டார். அடுத்து மகிப்பால் லோம்ரோர் பும்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். ஆனால் டிவிடி ப்ளேயில் பார்க்கும் போது பந்து ஸ்டெம்பை விட்டு வெளியே செல்வது போல்தான் தெரிந்தது. இந்தக் குளறுபடிகள் போட்டி நடைபெறும் போது நடந்து கொண்டிருக்க, போட்டிக்கு முன்னரே ஒரு சம்பவம் நடந்துள்ளது.
போட்டிக்கு முன்னதாக டாஸ் போடும் பொழுது டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சினைத் தேர்வு செய்தார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்றில் டாஸ் போடும் அதிகாரி அந்த நாணயத்தை மறுபுறம் புரட்டுவது தெரிகிறது. இதனால் டாஸ் போடப்படும் போதே போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டதா? என்று ரசிகர்கள் கோபமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கோலி கேப்டனா இருந்திருந்தா.. கண்டிப்பா இதை பண்ணி இருப்பார்.. கூறுகிறார் இந்திய முன்னாள் வீரர்
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் நடுவர்களின் அணி என்று ரசிகர்கள் கிண்டலடித்து வரும் வேளையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அது உண்மையாக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர்.
Rigged the toss too? @mipaltan pic.twitter.com/lmobHelD0S
— 🜲 (@balltamperrer) April 12, 2024

