ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து வரும் சூழ்நிலையில், இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆர்சிபி அணி தப்பிக்க ஒரு யோசனையை கூறி இருக்கிறார்.
17-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆர்சிபி அணி சற்று அழுத்தத்தில் இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்னர் மகளிர் ஐபிஎல் டி20 லீக் போட்டியில் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதனால் இந்த முறை ஐபிஎல் டைட்டிலை வென்றாக வேண்டிய கட்டாயத்திலேயே ஐபிஎல் தொடரை எதிர்கொண்டது.
ஆனால் இந்த சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. பலவீனமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு இந்த ஐபிஎல் தொடங்கிய பெங்களூர் அணி பேட்டிங் மட்டுமே முழுக்க முழுக்க நம்பி களம் இறங்கியது. ஆனால் இந்த முறை பேட்டிங்கும் பெங்களூர் அணிக்கு சொதப்ப தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் திணறி வருகிறது.
பேட்டிங்கை பொருத்தவரை விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மட்டுமே தொடர்ச்சியான பங்களிப்பை அணிக்கு அளித்து வருகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ், டாப்லீ என்று சர்வதேச வீரர்கள் இருந்த போதிலும், அவர்களால் சிறப்பாக செயல்பட்டு அனுப்பி வெற்றியைத் தேடித் தர முடியவில்லை. இந்த நிலையில் கேப்டன் டூ ப்ளஸ்சியின் கேப்டன்சியும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அணித்தேர்விலும், இக்கட்டான சூழ்நிலைகளில் வீரர்களுடன் கலந்துரையாடுவதிலும் விராட் கோலியிடம் இருக்கும் அர்ப்பணிப்பு இவரிடம் சற்று குறைவாகவே இருப்பதாக தோன்றுகிறது. எனவே டு பிளஸ்சிஸை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்பொழுது
“என்னை கேட்டால் நான் விராட் கோலியையே மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சொல்வேன் அப்போதுதான் வெற்றிக்காக அணி குறைந்தபட்சம் போராடும். விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் வெற்றிக்காக கடுமையாக வீரர்களை போராட வைத்திருப்பார். டு பிளசிஸ் அதை செய்ய வேண்டும். அவரால் சில தரமான பிளேயர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சதம் அடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:பும்ரோ ரொம்ப மோசம்.. ஒன்னு காலை உடைக்கிறாரு இல்லன்னா பேட்ட உடைக்கிறாரு.. சூர்ய குமார் யாதவ் பேட்டி
டு பிளஸ்சி கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறார். விராட் கோலியை மீண்டும் கேப்டன் ஆக்கினால் பெங்களூர் அணி போராடும் பிறகு வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

