ஐபிஎல்க்கு இனி அவ்ளோ முக்கியத்துவம் இல்ல.. டி20 உலக கோப்பை டீமே வேற.. தேர்வு குழு தலைவரின் புது ரூட்

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் இறுதியில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் முதல் கால அட்டவணையை மட்டுமே தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலின் காரணமாக தேர்தல் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டாம் கால அட்டவணையை அதற்கு பின்னர் வெளியிடும்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரானது வருகிற ஜூன் ஐந்தாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருப்பதால், இந்த முறை ஐபிஎல் தொடரை சற்று முன் கூட்டியே முடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்திய அணி புதிய நாடு, புதிய சூழ்நிலை என எதிர்கொள்ளப் போவதால் சற்று முன்கூட்டியே சென்று பயிற்சியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை விளையாடிவிட்டு, அதற்குப் பின்னர் 11 சர்வதேச டி20 போட்டிகளை மட்டுமே விளையாடி உள்ளது. உலகக்கோப்பையோடு ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதால் அவர் எந்த டி20 போட்டியிலும் பங்கு பெறவில்லை. மேலும் சமீபத்தில் கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தான் விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அணியில் இணைந்தார்கள். எனவே இந்திய அணிக்கு தற்போது இந்த ஐபிஎல் தொடர் மட்டுமே உள்ளது.

- Advertisement -

முன்பு நடந்த உலகக்கோப்பை தொடர்களில் ஐபிஎல்லில் நன்றாக செயல்படும் வீரர்களை வைத்து உலக கோப்பைக்குத் தேர்வு செய்து வந்தனர். ஆனால் அது இந்திய அணிக்கு கை கொடுக்காமல் போக, மாற்றாக ஒவ்வொரு உலககோப்பையிலும் பலத்த அடியே வாங்கியது. எனவே அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வு குழு புதிய முறையை பின்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது உலக கோப்பைக்கான அணியை முன்னரே தேர்வு செய்து விட்டதாகவும், ஐபிஎல்லில் அந்த வீரர்கள் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினால், அதற்கு மாற்றாக மட்டுமே புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சமீபத்திய உலகக்கோப்பை தொடர் தோல்விகளினால் பிசிசிஐ இந்த முறையை பின்பற்ற விரும்பவில்லை.

- Advertisement -

இது குறித்து பிசிசிஐ கூறுகையில்
“இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் முக்கியமானது தான். ஆனால் அதை வைத்து உலகக்கோப்பை டி20 அணியை தேர்வு செய்யும் வகையில் இருக்காது. முன்னரே டி20 உலகக் கோப்பைக்காண இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் யாராவது ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினால், மட்டுமே அதற்கு மாற்று வீரரை ஐபிஎல் தொடரில் இருந்து தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று கூறி இருக்கிறது.

ஐபிஎல் தொடர் முக்கியம் தான். ஆனால் அதைவிட டி20 உலகக் கோப்பை என்பது இந்தியாவிற்கான அடையாளம். 2007 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இதுவரை இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. எனவே இந்த முறையாவது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த வேட்கையை தனித்து இந்தியாவிற்காக கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles