நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் போது கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்தது. ஆனால் ஒரு முக்கியமான நேரத்தில் பண்டுக்கு நடந்த சம்பவிதம்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி கொல்கத்தா அணி வீரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இன்னிங்சைத் தொடங்கினார்கள். அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 12 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் குவித்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் ஆரம்பம் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக் கொண்டிருந்தார்.
அதிலும் குறிப்பாக நான்காவது ஓவரை இஷாந்த் சர்மா வீச, முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு இருக்கு விளாசி அமர்க்களபடுத்தினார் சுனில் நரேன். மூன்றாவது பந்தில் பவுண்டரி விளாசிய அவர், நான்காவது பந்தை அடிக்க முயற்சித்த போது அது தவறி பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் பண்டின் கைகளில் சிக்கியது.
அப்போது இசாந்த் சர்மா மற்றும் ரிஷப் பன்ட்டிற்கு பந்து பேட்டில் பட்டதாக தெரியவில்லை. இதனால் இவர்கள் இருவரும் அம்பையரிடம் முறையிடாமல் இருக்க, மற்றொரு ஆல் ரவுண்டரான மிச்சல் மார்ஸ் பேட்டில் இருந்து சத்தம் வந்ததாக கேப்டன் பண்டிடம் தெரிவித்தார்.
இதனால் சிறிது நேரம் யோசித்த பண்ட் அம்பையரிடம் டிஆர்எஸ் குறித்து தெரிவிப்பதற்குள் டைமிங் முடிந்ததாக அம்பயர் டிஆர்எஸ் தர மறுத்து விட்டார். இதற்கு முதலில் தவறு ரிஷப் பண்ட் மீது இருப்பதாக தெரிந்தது. ஆனால் தவறு உண்மையில் ரிசப் பன்ட் மீது இல்லை. திரையில் காட்டப்பட்ட டைமரின் படி டிஆர்எஸ் முறைக்கு பந்த் சிக்னல் கொடுத்த போது இன்னும் ஒரு வினாடி மீதம் இருந்தது. இதனால் நடுவர் மீது தவறா? என்ற சந்தேகம் இருந்தது.
நடுவர்கள் குறித்து இருக்கும் நேரம் மற்றும் திரையில் காட்டப்படும் நேரத்தில் இருந்து வேறுபடலாம். ஆனால் பெரும்பாலும் டிஆர்எஸ் டைமிங் என்பது பெரிய திரையிலையே தோன்றும். எனவே பெரிய திரையில் தவறு இருப்பதாக பன்ட்டும் ஒப்புக்கொண்டார். இது குறித்த அவர் கூறும் பொழுது
” நரேனின் பேட்டில் பந்து பட்ட போது மைதானத்தில் அதிக சத்தம் இருந்ததால் என்னால் தெளிவாக கேட்க முடியவில்லை. மைதானத்தின் திரையிலும் சில சிக்கல்கள் இருந்தன. இதில் சில விஷயங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம் ஆனால் சிலவற்றை கட்டுப்படுத்த முடியாது.
இதையும் படிங்க:நல்ல காலம் பொறந்திருச்சு.. மும்பை இந்தியன்ஸ்க்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி.. இனி எல்லாமே வெற்றி தான்
இவற்றைக் கடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை” என்று போட்டிக்குப் பிறகு தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்தத் தவறினால் சுனில் நரேன் 39 பந்துகளில் 7 சிக்ஸர்கள் என 85 ரன்கள் விளாசி, சிறந்த அடித்தளத்தை கொல்கத்தா அணிக்கு ஏற்படுத்தி கொடுத்தார் இதுவே இவரது அதிகபட்ச ரன் ஆகவும் அமைந்தது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

