இந்தியாவில் நடைபெறும் பிரபலமான கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெற்ற அணிகள் தங்களது முதல் வெற்றியை பெற்றுள்ள நிலையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. பரிதாப நிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது.
ஐபிஎல்லில் ஆண்ட அணிகள் என்று கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்குபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்து ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. மற்றொரு வெற்றிகரமான அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி பங்குபெற்ற மூன்று போட்டியிலும் தோல்வியடைந்து தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக விளங்குகிற மும்பை இந்தியன்ஸ் சொதப்பலான கேப்டன்சி மற்றும் அணி வீரர்களுக்குள் ஒற்றுமையின்மை ஆகிய காரணங்களால் வெற்றிகளை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவால் இன்னும் வெற்றிக்கான சூத்திரத்தை கண்டறிய முடியவில்லை. மேலும் அணிக்குள் எதிர்மறையான சூழல் நிலவுகிறதால் அந்த அணிக்கு தற்போது ஒரு வெற்றி என்பது மிகவும் அவசியமாகிறது.
மேலும் பேட்டிங்கிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பலான பங்களிப்பை வெளிப்படுத்தி வருவதால் தற்போது அந்த அணியை வலுப்படுத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு வருகிற ஏழாம் தேதி நடைபெற இருக்கிற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் டி20 தொடரில் பங்கேற்ற அவர் கணுக்காலின் காயம் காரணமாக அதற்குப் பிறகு விளையாடவில்லை. மேலும் ஜனவரி மாதத்தில் குடலிறக்க சிகிச்சை மேற்கொண்ட அவர், ஓய்வு பெற்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சான்றிதழை பெறத் தவறினார்.
இதையும் படிங்க :பாண்டியாவும் நம்மை போன்ற ஒரு மனிதர் தான்.. அவர் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டாமா?. ஆதரவு குரல் கொடுக்கும் ரவி சாஸ்திரி
இதற்குப் பிறகு தீவிர பயிற்சியின் மூலம், சூரிய குமார் யாதவ் தேசிய கிரிக்கெட் அகாடமியின் அனுமதியை பெற்றுள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வருகிற ஏழாம் தேதி மும்பையில் நடைபெற உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் ஆனது மேலும் வலுவடையும். இதன் மூலம் முதல் வெற்றியைப் பெற மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

