12 வருட சாதனை மட்டுமல்ல.. 3வது டெஸ்டில் 24 வருட இந்திய அணியின் பெருமையை குறி வைக்கும் நியூசிலாந்து.. பதட்டத்தில் கம்பீர்

நியூசிலாந்து மற்றும் இந்திய அணியின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இதில் இந்திய அணியானது கடுமையான அழுத்தத்தில் இருக்கிறது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏற்கனவே தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து டெஸ்ட் அணியானது தொடரின் தொடக்கத்திலிருந்தே தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் முதலிடத்தில் உள்ளது, மேலும் அவர்கள் மற்றொரு சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

வரலாற்று சாதனை செய்ய தயாராகி வரும் நியூசிலாந்து அணி:

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து தரப்பு அணி இந்திய அணியை ‘ஒயிட்வாஷ்’ செய்ய தயாராகி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் இந்திய அணியை தன் சொந்த மண்ணிலே 2-0 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ செய்த கடைசி அணி தென்னாப்பிரிக்கா என்ற சாதனையை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

2000 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியாவை ‘ஒயிட்வாஷ்’ செய்வதன் மூலம் ,கடந்த 24 ஆண்டு வரலாற்று மைல்கல்லை மாற்றி அமைத்த அணியாக நியூசிலாந்து அணி பதிவு செய்யும்.

ஃபாமுக்குத் திரும்புவார்களா வீரர்கள்:

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரின் ஃபார்ம்களும் கவலைக்குரிய நிலைமையில் இருக்கிறது, மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இரு இந்திய வீரர்களும் தங்கள் ஃபாமுக்கு வந்தாக வேண்டும்.வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான வலுவான 18 உறுப்பினர்களைக் கொண்ட அணியை இந்தியா அறிவித்தது மற்றும் அவர்களின் உலக சாம்பியன்ஷிப் தொடரும் அருகில் இருப்பதால், மும்பை டெஸ்டில் தங்களுக்கு அளித்திருக்கும் வாய்ப்பில் ஏதாவது சோபித்தாக வேண்டும்.

- Advertisement -

புனே மைதானத்தில் நடந்த டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீசுவதில் சரியாக சோபிக்கவில்லை, எனவே கடைசி டெஸ்டில் ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு கிடைத்தால் எப்படி விளையாடுவார் என்பதைப் பார்க்க வேண்டும்.

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரித் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (WK), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles