16 ஆண்டு கால சோகம்.. ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்குமா சிஎஸ்கே?. ‘எல் கிளாசிகோ’ போட்டியின் முக்கிய அம்சங்கள்

ஒரு ஐபிஎல் தொடரில் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிதான்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் இப்போட்டி, வணிக ரீதியாகவும், சந்தை மதிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கூடிய போட்டியாகவும் அமைந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்திய போது ஆரம்பித்தது இந்த போர். அப்போது இருந்து சென்னை, மும்பை அணிகள் மோதுகிற போட்டி என்றால் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெறுகிறது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் 38 முறை மோதியுள்ளன. இதில் 21 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 17 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன. மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் 11 முறை விளையாடி அதில் நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஏழு முறை மும்பை அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்த மைதானத்தை பொருத்தவரை இரண்டு அணிகளுக்கும் இடையேயான அதிகபட்ச ஸ்கோர் 187/6 ஆக இருந்துள்ளது. குறைந்தபட்ச ஸ்கோராக 135/9 ரன்களை வைத்துள்ளது. மேலும் சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் 174. இரு அணிகளுக்கும் இடையேயான மொத்த போட்டிகளில் சுரேஷ் ரெய்னா முப்பது போட்டிகளில் விளையாடி 710 ரன்கள், ரோஹித் சர்மா 27 போட்டிகளில் விளையாடி 700 ரன்கள், மகேந்திர சிங் தோனி 34 போட்டிகளில் விளையாடி 653 ரன்கள் குவித்து இருக்கிறார்கள்.

பந்துவீச்சை பொறுத்தவரை பிராவோ 26 போட்டிகளில் 31 விக்கட்டுகளும், மலிங்கா 21 போட்டிகளில் 31 விக்கெட், ஹர்பஜன்சிங் 26 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்கள். இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் மும்பை அணியில் இருந்து மட்டுமே ஒரே ஒரு சதம் வந்திருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மும்பை அணி வீரர் ஜெயசூர்யா 48 பந்துகளில் 114 ரன்கள் சென்னை அணிக்கு எதிராக குவித்திருந்தார்.

- Advertisement -

2008ல் இருந்து 16 ஆண்டு கால வரலாற்றில் எந்த ஒரு சிஎஸ்கே பேட்ஸ்மேனும் மும்பை அணிக்கு எதிராக ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற சோக வரலாறு நீடிக்கிறது. இந்த முறையாவது அந்த ஏக்கத்தை சென்னை அணி தீர்க்குமா? என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க:எங்க பிரச்சனை முடிஞ்சது.. இனி இவர்தான் விளையாடப் போறார்.. வெற்றிக்குப் பின் ரிஷத் பந்த் பேட்டி

எனவே மும்பையில் நடைபெறும் இப் போட்டியில் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காரணத்தினால், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணியே வெற்றி பெற வாய்ப்புள்ளது. மேலும் இது பேட்டிங் செய்வதற்கு சிறப்பான ஆடுகளம் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி பெரிய ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles