எங்க பிரச்சனை முடிஞ்சது.. இனி இவர்தான் விளையாடப் போறார்.. வெற்றிக்குப் பின் ரிஷத் பந்த் பேட்டி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணி தோல்வியில் இருந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.

- Advertisement -

லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டாசை இழந்த டெல்லி அணி முதலில் பந்து வீசியது. லக்னோ அணிக்கு தொடக்கம் ஓரளவு சிறப்பாக அமைந்தாலும் மிடில் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் அந்த தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த போட்டியில் அணியின் கேப்டன் கே எல் ராகுல் 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூரன் ஸ்டாய்னிஷ் ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளிக்க, அதற்கு பின்னர் வந்த ஆயுஷ் பதோனி மட்டுமே சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதனால் லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்து இருந்தது. முதல் சில போட்டிகளில் பந்துவீச்சில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய டெல்லி அணி இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியது.

- Advertisement -

அணியின் சூழ்நிலையை உணர்ந்து டெல்லி பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள். இதற்கு பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி 18 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு புதிதாக களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த 22 வயது வீரரான பிரேசர் அருமையாக விளையாடினார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு பவுண்டரி 5 சிக்சர் என விளாசி 55 ரன்கள் குவித்தார்.

இதனால் டெல்லி அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில்
“இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. நாங்கள் வெற்றிக்காக போராடினோம். நாங்கள் ஒரு சாம்பியன்கள் போல சிந்தித்து அணியின் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும் என்று அணி வீரர்களிடம் கூறி இருந்தேன். எங்கள் பந்துவீச்சில் பிரச்சனைகள் இருந்தது.

- Advertisement -

அதனை சரி செய்ய வேண்டும். அதற்கு சில நபர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சிலவற்றை நீங்கள் கட்டுப்படுத்தலாம் சிலவற்றை கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் இப்போதுதான் ஒரு சரியான பிளேயிங் லெவனில் நெருங்கி வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் பல வீரர்களுக்கு காயம் இருக்கிறது. ஆனால் இதையே காரணமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

இதையும் படிங்க:இந்த பெருமை குல்தீப் யாதவையே சேரும்.. இவரோட விக்கெட்தான் கேம மாத்துச்சு.. தோல்விக்கு பின் கேஎல் ராகுல் பேட்டி

தற்போது எங்களது அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி விளையாட பிரேசரை கண்டுபிடித்து இருக்கிறோம். இனி அவர்தான் விளையாடப் போகிறார்.இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles