இந்த பெருமை குல்தீப் யாதவையே சேரும்.. இவரோட விக்கெட்தான் கேம மாத்துச்சு.. தோல்விக்கு பின் கேஎல் ராகுல் பேட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையான போட்டியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

லக்னோவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்திருந்தது. தொடக்கம் நன்றாக அமைந்தாலும் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்ப 94 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது லக்னோ அணி.

- Advertisement -

அதற்கு பின்னர் களம் இறங்கிய ஆயுஸ் பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள், ஹர்ஷத் 16 பந்துகளில் 20 ரன்கள் குவிக்க இறுதியாக 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் எட்டு இடங்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், அதற்குப் பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் 22 வயது வீரர் பிரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

பிரேசர் மெக்கர்க் 35 பந்துகளில் 55 ரண்களும், கேப்டன் ரிஷப் பந்த் 41 ரன்களும் குவிக்க, டெல்லி அணி 18 வது ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை டெல்லி அணி பதிவு செய்தது. லக்னோ அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் முதல் தோல்வியாகும்.

தோல்விக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூறும் பொழுது
“வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் பத்து முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.தொடக்கம் எங்களிடம் அருமையாக இருந்தது. இறுதியாக நாங்கள் 180 ரன்கள் குவித்திருக்க வேண்டும். டெல்லி அணியின் குல்தீப் யாதவ் அற்புதமாக பந்து வீசினார்.

- Advertisement -

புதிய வீரராக வந்த பிரேசர் பற்றி எங்களுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவர் அற்புதமாக விளையாடினார் அவருக்கு எனது பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க விரும்புகிறோம். சரியான பகுதிகளில் தாக்க நினைக்கிறேன். வார்னர் விக்கெட் முதலில் கிடைத்தது. அதற்கு அடுத்து இரண்டு விக்கெட்கள் கிடைத்தன. ஆனால் பிரேசருக்கு தவற விட்ட கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து விட்டது.

இதையும் படிங்க:நாடு விட்டு நாடு தாண்டி மானம் போகுது.. ஆர்சிபியைக் கலாய்க்கும் ஓட்டப்பந்தய வீரர்

அக்சர்பட்டேல் பந்து வீசிய பொழுது பந்தில் பெரிய சுழல் இல்லை. எனவே பூரான் களமிறங்கிய போது அவர் களத்தில் கொஞ்ச நேரம் நின்றால் நாங்கள் பெரிய ரன்களுக்கு செல்வோம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் விக்கெட் வீழ்த்திய பெருமை குல்தீப் யாதவிற்கே சேரும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles