இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒரு நாள் தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திரும்பி இருக்கின்றனர்.
டி20 உலக கோப்பை வென்ற கையோடு முன்னணி வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு அளித்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு இளம் அணி அனுப்பப்பட்டது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால் அதற்கு முன்பாக இந்திய அணி ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க உள்ள நிலையில் தற்போது சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் திரும்பி உள்ளனர்.
இந்த மாதம் இறுதியில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், ரோகித் சர்மா ஒரு நாள் தொடருக்கு கேப்டனாக இருக்கிறார். டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த இரண்டு தொடர்களுக்குமே சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு நாள் தொடருக்கு விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த இரு தொடர்களிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிவம் தூபே அணியில் இணைகிறார். மேலும் ரியான் பராக் மற்றும் ஹர்ஷித்ரானா ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு அடுத்த அறிவிக்கப்பட்ட டி20 அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். கில் இதிலும் துணை கேப்டன் ஆக தொடர, ருத்ராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க:ஓய்வு எல்லாம் கிடையாது.. இலங்கைத் தொடருக்கு எல்லாரும் இருக்கணும்.. ஆட்டத்தை ஆரம்பித்த கம்பீர்
மேலும் ரியான் பராக் அணியில் இணைய டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக தொடர்கிறார். இலங்கை அணிக்கு எதிரான 15 பேர் கொண்ட ஒரு நாள் இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் (து.கே), விராட் கோலி, கேஎல் ராகுல் (வி.கீ), ரிஷப் பந்த் (வி.கீ), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது மற்றும் ஹர்ஷித் ராணா.
டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கே), சுப்மான் கில் (து.கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (வி.கீ ), சஞ்சு சாம்சன் (வி. கீ), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் முகமது. சிராஜ்.

