இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது.
இதற்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னணி வீரர்கள் ஆன சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் திரும்பவும் இந்திய அணிக்கு திரும்ப இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் அணியின் ஜாம்பவான் வீரர்களுக்கான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் ஓய்வு கேட்டிருப்பதாகவும் இந்திய நிர்வாகம் அனுமதிய அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்ச்சியாளராக பதவியேற்றார். இந்த நிலையில் அவர் முன்னே சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற இரண்டு பெரிய ஐசிசி தொடர்கள் இருக்கிறது. சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஒரு நாள் போட்டிகளாக நடைபெற இருப்பதால் இந்திய அணி இலங்கை தொடரோடு சேர்த்து மொத்தமாக ஆறு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முக்கிய வீரர்கள் ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் போதிய பயிற்சியையும் பெற முடியாது. இதனால் அடுத்த ஐசிசி தொடரை கருத்தில் கொண்டு இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க வேண்டும் என்று கூறியதாகவும், தற்போது இந்த இருவருமே அடுத்த தொடருக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரோகித் சர்மா தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். விராட் கோலியும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இனி கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக மட்டுமே இந்தியா வருவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:விராட் என்னுடன் பகிர்ந்த 40 நிமிடங்கள்.. அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை காட்டியது-ஷஷாங்க் சிங் நெகிழ்ச்சி
பயிற்சியாளர் கம்பீர்தான் இந்த இரண்டு வீரர்களும் பங்கேற்க முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்ம ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவர்களின் அடுத்த இலக்காக சாம்பியன் டிராபி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு சூரியக்குமார் யாதவா? அல்லது ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

