இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டுக்காக பல சாதனைகள் படைத்திருந்தாலும், பதவியும் பணமும் வந்த பிறகு அவர் நிறைய மாறிவிட்டார் என்று சில சர்ச்சையான கருத்தை கூறி அமித் மிஸ்ரா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய விராட் கோலி குறித்துக் கூறியது அப்படியே நேர் எதிராக இருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா விராட் கோலி 14 வயதில் இருந்தே தனக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் நிறைய முறை இரவு நேரங்களில் ஒன்றாக சமோசா சாப்பிட்டு இருக்கிறோம். விராட் கோலி சில நேரங்களில் பீட்சா கேட்பார். அப்படி நெருங்கிய நண்பர்களாக இருந்த நாட்கள் உண்டு. விராட் கோலி மீது ஒரு இந்திய வீரராக எனக்கு எப்போதுமே மதிப்பு இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் ஆக அவர் மிகச் சிறந்த வீரர்.
ஆனால் கேப்டன் ஆன பிறகு அவர் நிறையவே மாறிவிட்டார். பதவியும், புகழும் வந்த பின்னர் அவரிடையே நிறைய மாற்றங்கள் இருக்கிறது. தேவைக்காகத்தான் தங்களிடம் பழகுகிறார்கள் என்று அவர் நினைக்க ஆரம்பித்து விட்டார். மேலும் விராட் கோலி இளம் வீரர்களை கூட சரியாக நடத்துவதில்லை. அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என்று யாருக்குமே சரியான மரியாதை தருவதில்லை. நான் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே ஏற்பட்ட மோதலின் போது கூட விராட் கோலி சென்று சமாதானம் செய்யவில்லை.
இப்படி அமித் மிஸ்ரா விராட் கோலி குறித்து கூறியிருக்கும் நிலையில், பஞ்சாப் அணிக்காக இந்த வருட ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார். அவர் விராட் கோலி குறித்து கூறும் பொழுது “பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பின்னர் நாங்கள் அனைவரும் கிளம்ப தயாராக இருந்தோம். அப்போது மணி ஒரு 12:40 இருக்கும். அப்போது நான் விராட் கோலி இடம் பேசத் தொடங்கினேன்.
அவருடன் பேச ஆரம்பித்த பிறகு 40 நிமிடங்கள் எப்படி சென்றது என்று தெரியவில்லை. கிரிக்கெட், ஷாட்ஸ், டெக்னிக் மற்றும் மனரீதியாக எப்படி தயாராவது என்பது போன்ற விஷயங்களை விராட் கோலி எடுத்துக் கூறினார். அது மிகவும் அனுபவம் உள்ளதாக இருந்தது. அவருடன் பேசியது எங்கள் மாநில வீரருடன் பேசிய உணர்வை கொடுத்தது. பயிற்சியின்போது எப்படி வீடியோ எடுக்க வேண்டும், அதை எப்படி ஆராய வேண்டும் என்பது போன்ற விவரங்களையும் விராட் கோலி சொல்லிக் கொடுத்தார்.
இதையும் படிங்க:சச்சின் தோனி எப்படியோ.. அதே மாதிரி தான் இவங்க ரெண்டு பேரும்.. அவ்வளவு சீக்கிரம் ஆள் கிடைக்காது- கபில்தேவ் பேட்டி
ஆனால் பேசும்போது அவரிடம் எந்த ஒரு நெகட்டிவான வார்த்தைகள் வெளிப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். விராட் கோலி குறித்து அமித் மிஸ்ரா இப்படியான சர்ச்சை கருத்துக்கள் கூறிவரும் நிலையில் ஷஷாங்க் சிங் விராட் கோலி குறித்து கூறியிருப்பது

