சச்சின் தோனி எப்படியோ.. அதே மாதிரி தான் இவங்க ரெண்டு பேரும்.. அவ்வளவு சீக்கிரம் ஆள் கிடைக்காது- கபில்தேவ் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அவர்களது இடத்தை நிரப்ப இன்னும் இந்திய அணியில் சரியான வீரர்கள் அமையவில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சச்சின், டோனி போல இந்த இரு வீரர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் கூறுகிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டின் தலைசிறந்த ஜாம்பவான் ஆன கபில் தேவ் 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல வழிவகுத்தவர். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரது ஓய்விற்குப் பிறகு இந்திய அணியில் பல வீரர்கள் விளையாடிவிட்டனர்.

- Advertisement -

இருப்பினும் இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா போல் ஆல் ரவுண்டர் வீரர்கள் இந்தியாவில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினாலும் அவரது இடத்தை நிரப்புவது என்பது கடினமான காரியமே. இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஓய்விற்கும் பிறகு இந்த இரண்டு வீரர்களின் இடத்தை நிரப்புவது மிகப்பெரிய காரியம் என்று கபில்தேவ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கப்பல் தேவ்விரிவாக கூறும்பொழுது “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. டி20 கிரிக்கெட் மட்டுமல்ல, எந்த வடிவ கிரிக்கெட் தொடராக இருப்பினும் அவர்களது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான காரியம். இந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை கண்டுபிடிப்பது என்பது கடினம்.

- Advertisement -

இவர்கள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர்களாக இருந்திருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் இவர்களுக்கு இந்த உலகக் கோப்பை சிறந்த வழியனுப்பும் தருணமாக அமைந்திருக்கிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது போல அனைத்து வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவருமே சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி எப்படியோ அப்படியேதான்.

இதையும் படிங்க:டிராவிட் கில்லுக்கு சப்போர்ட் பண்றாரு.. ஆனால் கில்லை விட மூணு ஃபார்மேட்லயும் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்- அமித் மிஸ்ரா பேட்டி

சச்சின் மற்றும் தோனிக்குமே சரியான இரண்டு மாற்று வீரர்களை இன்னுமும் இந்தியா கண்டுபிடிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார். கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஏற்படுத்திய தாக்கத்தை போல அவரைப் போலவே அடுத்த வீரர் கிடைப்பது என்பது கடினம் தான். இருப்பினும் இந்திய அணி அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதே மிகவும் நல்ல விஷயமாகும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles