சுப்மான் கில் தற்போது இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவிலான தொடர்களிலும் நிரந்தரமான வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் கில்லை விட மூன்று வடிவு தொடர்களிலும் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான கில் அடுத்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி தனது திறமையை நிரூபித்ததால் தற்போது இந்திய அணியில் நிரந்தர வீரராக தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவோடு களம் இறங்கி விளையாடி வருகிறார்.
இந்திய மண்ணில் தொடர்ச்சியாக தனது நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் கில் வெளிநாட்டு மண்ணில் அவ்வப்போது தடுமாறி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க ஆட்டங்களில் சொதப்பி கடைசி இரண்டு ஆட்டங்களில் மட்டும் ஓரளவு நன்றாக பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் தனது வெளிப்படையான கருத்துக்கள் மூலம் அதிரவைத்து வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கில்லை விட ருத்ராஜ் சிறப்பான பேட்ஸ்மேன் என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “சுப்மான் கில்லை விட ருத்ராஜ் மூன்று வடிவங்களிலும் சிறப்பான பேட்ஸ்மானாக திகழ்கிறார். இருப்பினும் கில் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான்.
டிராவிட் கில்லின் மீது வைத்துள்ள முழுமையான நம்பிக்கையின் காரணமாகவே கில் சர்வதேச தொடர்களில் நிலையான இடத்தை பிடித்து வருகிறார். அவர் திறமையான வீரர் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை ஆனால் அவரை விட தற்போது ருத்ராஜ் சிறப்பாக விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்” என்று கூறியிருக்கிறார். சமீப காலமாக ருத்ராஜ் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி மொத்தமாக ஐந்து போட்டிகளில் 158 ஸ்ட்ரைக் ரேட்டில் 66 பேட்டிங் ஆவரேஜ் வைத்து 133 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோலியை நான் தப்பு பண்ண வைப்பேன்.. ஆனா அதை பண்ண வேணாம்னு சொல்லும் போது எனக்கு எரிச்சலா இருக்கு- டிம் பெயின் பேட்டி
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை கில் ஓரளவு சிறப்பாக வழி நடத்திய காரணத்தால் அவருக்கு சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஆக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் மற்ற நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தனது கேப்டன் திறமையை நிரூபித்து இருக்கிறார். எனவே இனிவரும் காலங்களிலும் கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்டியாவின் பெயருக்கு இணையாக இவரது பெயரும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

