கோலியை நான் தப்பு பண்ண வைப்பேன்.. ஆனா அதை பண்ண வேணாம்னு சொல்லும் போது எனக்கு எரிச்சலா இருக்கு- டிம் பெயின் பேட்டி

ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவத்தொடர்களிலும் ஜாம்பவானாக விளங்கும் விராட் கோலி தற்போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரரான டிம் பெயின் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி மூன்று வடிவத்தொடர்களிலும் சிறப்பாக செயல்படும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர். தனது திறமையான பேட்டிங்காலும் மற்றும் களத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளினாலும் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று உறுதியாக நம்புபவர். 2014 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது தனது ஆக்ரோஷமான அணுகுமுறையினால் ஆஸ்திரேலியா வீரர்களால் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்டார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா வீரர்களும் விராட் கோலியை வம்புக்கு இழுக்க, அந்த தொடரில் மட்டும் விராட் கோலி 693 ரன்கள் குவித்தார். இதற்குப் பின்னர் நான்கு வருடங்கள் கழித்து திரும்பவும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் விராட் கோலி யாரும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதையே கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக வைத்திருக்கும் ஆஸ்திரேலியா அணி வீரர்களே இவ்வாறு கூறுவது கவனிக்கத்தக்க வகையில் அமைந்தது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் வீரர் ஆன டிம் பெயின் விராட் கோலி குறித்து கூறும் பொழுது “விராட் கோலி விளையாடும் போது எந்தவித வம்புக்கும் இழுக்க வேண்டாம் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலியை வம்புக்கு இழுத்தாலும், இருக்காவிட்டாலும் அவர் தனது வேலையை சிறப்பாக செய்யக்கூடியவர்.

- Advertisement -

அவர் எப்படியும் ஒரு போட்டி இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் ரன்களை குவித்து விடுவார். அதனால் அவரை வம்புக்கு இழுப்பதை விட அவரை வேறு திசையில் கவனத்தை இழக்கும் வகையில் முயற்சி செய்வேன். இதனால் அவர் நிச்சயமாக தவறு செய்ய வாய்ப்புண்டு. ஒருவர் நம்மிடம் ஆக்ரோஷமாக பேசுவதால் மட்டுமே ஒருவர் சிறப்பாக விளையாட முடியாது. மேலும் விராட் கோலி வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கூறுவது எனக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கும்.

இதையும் படிங்க:தோனியின் பலே திட்டம்.. இளம் திறமைகளை கண்டறிய.. சிஎஸ்கேவின் அடுத்த அடி.. முழு விபரம்

ஆனால் அதே நேரத்தில் மைக்கேல் கிளார்க் கூறிய கருத்தை நான் ஏற்கவும் செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தற்போது டி20 ஃபார்மெட்டில் ஓய்வு பெற்றிருக்கும் விராட் கோலி இனி அடுத்ததாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles