தோனியின் பலே திட்டம்.. இளம் திறமைகளை கண்டறிய.. சிஎஸ்கேவின் அடுத்த அடி.. முழு விபரம்

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகள் என்று கூறப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை இரண்டு அணிகளுமே தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு அணிகளின் ஸ்டார் மதிப்பை தாண்டி திறமையான கேப்டனும், திறமையான வீரர்களும் சரியாக கண்டறியப்படுகிறார்கள்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமையான இளம் வீரர்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. தற்போது இந்திய கிரிக்கெட் அணிகள் கலக்கிக் கொண்டிருக்கும் சூரியகுமார் யாதவ் பும்ரா, ஹர்திக் பாண்டியா அடுத்து இந்திய அணியில் எதிர்காலங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் திலக் வர்மா, இசான் கிஷான், வதேரா போன்ற இளம் திறமைகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தான் உருவாகின்றன.

- Advertisement -

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிலும் ருத்ராஜ், சர்துல் தாக்கூர், துஷார்தேஷ்பாண்டே போன்ற திறமையான வீரர்களும் இருக்கிறார்கள். இதனால் தான் இந்த இரண்டு அணிகளுமே மற்ற அணிகளை காட்டிலும் முன்னணி அணிகளாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை கேப்டனாக இருந்த தோனி மற்றும் மும்பை கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஆகியோரும் அணிக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து சிறப்பாக செயல்படக்கூடிய கேப்டன்களாகவும் இருந்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதன் அடுத்தபடியாக திறமையான இளம் வீரர்கள் கொட்டிக் கிடக்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது பயிற்சி மையத்தை தொடங்கி இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் வெளியே திறக்கப்படும் மூன்றாவது பயிற்சி மையமாக சிஎஸ்கேவின் பயிற்சி மையம் அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை எப்போதுமே திறமையான பந்துவீச்சாளர்களுக்கும் அதிரடியான பேட்ஸ்மேன்களுக்கும் பஞ்சமே இருக்காது.

- Advertisement -

இதனை சரியாக உணர்ந்த சிஎஸ்கே நிர்வாகம் அங்கு பயிற்சி மையத்தை ஆரம்பித்து அதன் மூலம் திறமையான வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நுழைக்கவும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளது. இதில் நிச்சயமாக மகேந்திர சிங் தோனியின் ஈடுபாடும் என்றும் ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் யாரும் அறியாத பல இளம் வீரர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து சிஎஸ்கேவில் புகுத்த முடியும்.

இதையும் படிங்க:தோனியின் இடத்தை நிரப்ப வருகிறாரா பண்ட்.? டெல்லி அணியில் விரிசலா? இது எந்த அளவிற்கு சாத்தியம்.. முழு விபரம்

அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு அங்கு பயிற்சி கொடுத்து அங்கேயும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமாக இந்திய வீரர்கள் இளம் வயதிலேயே அங்குள்ள அனுபவங்களை நன்றாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles