ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான ஏலமானது, வருகின்ற நவம்பர் 24-25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஏலம் நடைபெறவுள்ளது. 2025-கான மெகா ஏலமானது மிகவும் போட்டி வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலத்தில், இந்தியாவிலிருந்து 1,165 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 409 பேர் என மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 320 கேப்டு வீரர்களும், 1,224 பேர் அன்கேப்டு வீரர்களும் மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
ESPN Cricinfo அறிக்கையின்படி, மூத்த வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையான வீரர்கள் மற்றும் சில இந்திய வீரர்களும் தங்களின் அடிப்படை விலையை ரூபாய் 2 கோடியாக நிர்ணயித்துள்ளனர்.
லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுல், டெல்கி அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான ரிஷப் பண்ட் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரும் உரிமையாளர்களால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு பிறகு ஏலத்தில் விடப்படுவர்.இவர்கள், கேப்டன் தேவைப்படும் அணியான பஞ்சாப் கிங்ஸ், டிசி, எல்எஸ்ஜி, கேகேஆர் மற்றும் ஆர்சிபி போன்ற உரிமையாளர்களிடமிருந்து அதிக தொகையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் ஏலத்தில் உள்ளனர். காயம் காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் விளையாடாத, குஜரா அணியின் வீரரான முகமது ஷமியும் ஆரம்ப விலையான ரூபாய் 2 கோடிக்கு தன்னை பட்டியலிட்டுள்ளார்.
தமிழக வீரர்களான, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் டி நடராஜ் ஆகியோரும் ரூபாய் 2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர்.
மெகா ஏலத்தில் டாப் வீரர்களுக்காக கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு எஞ்சிய பட்ஜெட் மட்டுமே ரூபாய் 110.5 கோடியாக இருக்கிறது. சில அணிகள் முக்கிய வீரர்களைப் பாதுகாப்பதிலே கவனம் செலுத்துவார்கள்.
ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்த இந்திய வீரர்களின் பட்டியல்:
ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, கலீல் அகமது, தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், இஷான் கிஷன், முகேஷ் குமார், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, டி.நடராஜன், தேவ்தட் பாடிக்கல், கே.எல். பாண்டியா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ்.

