சும்மா இருக்க மாட்டீங்களா யுவி?. இப்ப பாத்திங்களா என்ன ஆச்சுன்னு.. யுவராஜிடம் வருத்தம் அடைந்த அப்ரிடி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை குறைந்த ரன்களில் தோற்கடித்தது இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதில் ஒரு முக்கிய அங்கமாக அந்தப் போட்டியில் வர்ணனையாளர்களாக இருந்த யுவராஜ் சிங் மற்றும் அப்ரிடி ஆகியோருக்கு இடையே ஒரு சுவாரசியமான வாக்குவாதமும் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

பந்து வீச்சுக்கு சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 113 ரன்கள் மட்டுமே குவித்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி ஏறத்தாழ உறுதி செய்தது. ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை தற்போது வந்திருக்கிறது. இனி மற்ற அணிகளின் முடிவை பொருத்தே பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங்கும் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் அப்ரீடியும் அப்போட்டிக்கு வர்ணனையாளர்களாக செயல்பட்டனர்.

அப்போது அவர்களுக்கிடையே ஒரு சிறிய விவாதமும் நடைபெற்று உள்ளது. போட்டி முடிவதற்கு முன்பாகவே யுவராஜ் சிங் பாகிஸ்தான் அணிதான் வெல்லும் என்று அப்ரிடியிடம் வாழ்த்துக்கள் சொன்னதற்குப் பிறகு பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருப்பதாக அப்ரிடி வருத்தம் தெரிவித்துள்ளார் இது குறித்த அவர் கூறும் பொழுது
” யுவி, நான் சோகமாக இருப்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் இந்த போட்டியில் தோற்று இருக்க வேண்டுமா? பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது இந்திய அணி தோல்வி அடைவது என்னால் பார்க்க முடியவில்லை என்று போட்டியிலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறினீர்கள். நீங்கள் அப்போது வாழ்த்துக்கள் என்னிடம் சொல்லும்பொழுது இன்னும் 40 ரன்கள் இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் சற்று கடினம்தான் அதனால் வாழ்த்துக்கள் சொல்லாதீர்கள் என்று கூறினேன். ஆனால் இப்போது பாருங்கள் முடிவு இந்தியாவின் பக்கம் வந்திருக்கிறது” என்று வருத்தத்துடன் கூறினார்.

இதையும் படிங்க:வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்று தூற்றியவர்களே இன்று கொண்டாடுகிறார்கள்.. ஐபிஎல்லை நினைவு கூறும் ஆகாஷ் சோப்ரா

இது குறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது
” நான் உங்களிடம் பாகிஸ்தான் அணி வெல்லும் என்று கூறினேன். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் மீதும் நம்பிக்கை எனக்கு இருந்தது. வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம் ஆனால் நாம் நமது அணிகளுக்காக தொடர்ந்து ஆதரவினை அளிக்க வேண்டும்” என்று யுவராஜ் சிங் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles