டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தற்போது இரண்டு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த ரன்கள் அடித்த போதிலும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே குவிக்க பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகள் கைவசம் இருந்த போதிலும் 113 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.
அதிலும் முக்கியமாக இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்பினாலும், பௌலிங்கில் மிகவும் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஐபிஎல்லில் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்திய பாண்டியா அதுவே நாட்டுக்காக விளையாடும் போது அசத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கிண்டல் அடித்த ரசிகர்களே தற்போது ஹர்திக் பாண்டியாவை பாராட்ட தொடங்கியுள்ளனர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது
“ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ஐபிஎல் தொடரில் ஏராளமான மக்கள் கரகோஷங்களை எழுப்பினார்கள். தற்போது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பாருங்கள். அன்று இவருக்கு எதிராக கரகோஷம் எழுப்பிய மக்களே தற்போது இவரை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
நீங்கள் சிறப்பாக விளையாடினால் உங்களை திட்டியவர்கள் கூட உங்களை பாராட்ட ஆரம்பிப்பார்கள். 140 கோடி இந்திய மக்களிடம் இருந்து நான் ஒரு விஷயத்தை தெளிவாக கற்றுக் கொண்டுள்ளேன். அதாவது இந்த மக்கள் நீங்கள் யார் என்று தெரியாவிட்டால் கூட கிரிக்கெட் விளையாடும் போது உங்களுக்காக இவர்கள் பிரார்த்திப்பார்கள். அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம்.
இதையும் படிங்க:இந்தியா சூப்பர் 8க்கு முன்னாடி இதை பண்ணியே ஆகணும்.. இல்லைனா பெரிய பிரச்சனை ஆயிடும்.. ரோகித்தை எச்சரிக்கும் புள்ளி விவரம்
தற்போது ஹர்திக் பாண்டியா ஒட்டுமொத்த ரசிகர்களை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் ” என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். அந்தப் போட்டியின் மூலமாக ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் (13 விக்கெட்)என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் அமெரிக்க அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக தகுதி பெறுகிறது.

