இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் இருக்கிறது.
ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணியாக அமைந்தது இந்திய அணியின் பந்துவீச்சு. அந்த காரணிகளால் மட்டுமே இந்திய அணி குறைவான ரன்கள் அடித்த போதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது.
குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆனால் இந்திய அணியின் தீப்பொறி பறக்கும் பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியை 113 ரன்கள் கட்டுப்படுத்தி வெற்றியும் பெற்றது. குறிப்பாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அந்தப் போட்டியில் நான்கு ரன்கள் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
பொதுவாக இந்திய அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி மிகவும் சிறப்பாகவே செயல்பட்டார். இந்த சீசனிங் ஐபிஎல் தொடரில் 700 ரன்களுக்கும் அதிகமாக குவித்து அதிக ரன்கள் குறித்து அதற்கான ஆரஞ்சு தொப்பியையும் இவரே வென்றார். இதன் காரணமாகவே ரோஹித் சர்மா இவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க முடிவு செய்தார்.
விளைவு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி மொத்தமாக ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக தற்போது அமைந்துள்ளது. எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கும் விராட் கோலி இரண்டாவது போட்டியில் வெறும் 4 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாம் வரிசையில் களம் இறங்கி விளையாடும் விராட் கோலி முறையே 78, 36, 55, 57, 82 சிறப்பாக விளையாடி ரன்கள் குறித்துள்ளார். இதுவரை டி20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி 24 முறை மூன்றாவது வரிசையில் களமிறங்கி அதில் ஒரே ஒருமுறை மட்டுமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி இருக்கிறார். ஆனால் மூன்றாவது இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் இதுவரை மூன்று முறை விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க:ரிஷப் பண்ட்டை அந்த சூழ்நிலையில் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வழிந்தது.. ரவி சாஸ்திரி உருக்கமான பேட்டி
அந்த மூன்று முறையில் விராட் கோலி ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறி இருக்கிறார். இதுவரை டி20 உலக கோப்பை வரலாற்றில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி இருக்கும் வேளையில், தற்போது அமெரிக்க ஆடுகளம் பந்துவீச்சுக்ககு சாதகமாக இருக்கும் வேளையில் விராட் கோலி போன்ற பேட்டிங் நுணுக்கம் தெரிந்த தரமான பேட்ஸ்மேன் நங்கூரமாக நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம். இதனால் விராட் கோலி இனிவரும் போட்டிகளில் மூன்றாவதாக களமிறங்கி விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

