நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் 40 ரன்கள் அடித்தது மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங்கில் மூன்று முக்கிய கேட்ச்களையும் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்க்காக ஒரு சூழ்நிலையில் அவர் கண்ணீர் விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்தவராக ரிஷப் பண்ட் இருக்கிறார். முன்பை விட தற்போது அவரது பேட்டிங் நன்றாக மெருகேறி இருக்கிறது. தேவையில்லாத ஷாட்கள் விளையாடுவதை விட ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடுகிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவரது ரன்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. இவர் குவித்த 42 ரன்கள் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் அணியின் மிக முக்கியமான மூன்று வீரர்களின் கேட்ச்களையும் பிடித்து வெளியேற்றினார். இவரது செயல்பாடு இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தது. இவரது ஃபீல்டிங்க்காக ரவி சாஸ்திரி இவருக்கு சிறந்த பீல்டருக்கான விருதையும் வழங்கினார்.
மேலும் பண்ட் குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி இவரது விபத்து குறித்து தான் அறிந்த போது கண்ணீர் விட்டதாகவும், மருத்துவமனையில் இவரது நிலைமை மிக மோசமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்பொழுது
“ரிஷப் பண்ட் பற்றி நான் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் மிக அற்புதமாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது விபத்து குறித்து நான் கேள்விப்பட்ட போது என் கண்களில் கண்ணீர் வடிந்தது.
மருத்துவமனையில் நான் அவரை சென்று பார்த்த போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவர் அந்த இடத்தில் இருந்து திரும்பி தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக எனக்கு உள்ளது. பேட்டிங் குறித்து உன்னை எல்லோரும் அறிவார்கள், நீ ஒரு எக்ஸ் ஃபேக்டராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாய்.
இதையும் படிங்க:ஊடக வெளிச்சத்தில் தப்பிக்கிறார் கோலி.. இந்தியாவை ஜெயிக்க வைக்கிறது இவர்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சனம்
ஆனால் சிகிச்சை முடிந்து வந்து விக்கெட் கீப்பிங்கில் இவ்வளவு அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் உன்னுடைய மூமண்ட் மிக வேகமாக இருக்கிறது. நீங்கள் இதற்காக எவ்வளவு கடினமாக உழைத்து இருக்கிறாய் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. நீ தற்போது மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளாய். இதேபோன்று வரும் போட்டிகளிலும் நன்றாக செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

