டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் சில வீரர்களுக்கு ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், உலக கோப்பையில் இந்திய அணி இவர்களால் ஜெயிக்கவில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.
2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து அதிகமாக பேசப்பட்டது. இந்திய அணிக்காக கோலிதான் அதிக போட்டிகளை வென்று கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.
விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். சௌரவ் கங்குலி உட்பட விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் அதிக ஸ்ட்ரைக் வீட்டில் 100 ரன்கள் கூட அடிப்பார் என்று கூறினார். விராட் கோலி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி நான்கு ரன்களில் வெளியேறினார்.
இந்த நிலையில் விராட் கோலி ஊடக வெளிச்சத்தில்தான் அதிகமாக தப்பிக்கிறார் என்றும், குறிப்பாக பும்ரா தான் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி கொடுத்திருக்கிறார் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேகர் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“விராட் கோலி மற்றும் மற்றும் சிலரை இந்திய ஊடகங்கள் அதிகமாக பாராட்டி வரும் நிலையில் இந்திய அணிக்காக பும்ரா சப்தமே இல்லாமல் சிறப்பாக விளையாடி வெற்றிகளை தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போதுள்ள இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர் என்றால் அது பும்ரா ஒருவர் மட்டுமே ஆவார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர்தான் இந்தியாவில் சிறந்த வீரராக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார். இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா முக்கியமான தருணங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதே பார்ம் தொடரும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் கருத்துக்கள் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ரோகித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன்.. அவர் டீம்ல எல்லாரையுமே நம்புறாரு.. ரோஹித்தை பாராட்டும் ராபின் உத்தப்பா
விராட் கோலியின் தரம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். ஐபிஎல் இல் தொடக்க ஆட்டக்காரராக இந்த சீசனில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்கிறார். இதனால் இரண்டு போட்டிகளை வைத்து அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து எதையும் பேசக்கூடாது. அடுத்த போட்டியில் விராட் கோலி நிச்சயமாக சிறப்பாக விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

