11 பேருக்கும் நான் வந்து விளையாட முடியாது.. ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் உள்ளது.. பாபர் ஆசம் கோபம்

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

கேப்டன் பதவியை விட்டு விலக முடிவு எடுத்தால் நான் அதனை வெளிப்படையாகவே அறிவிப்பேன் என்றும் அணியில் உள்ள அனைவருக்காகவும் நான் வந்து விளையாட முடியாது என்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கோபமாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல், முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்து அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டிய போட்டிகளையும் சுமாராகவே வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம்தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தான் மட்டுமே விளையாட வில்லை என்றும், 11 வீரர்கள் கொண்ட அணி தான் விளையாடுகிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம், லீக் சுற்றில் அணி வெளியேறியதற்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

இது குறித்து பாபர் ஆசம் விரிவாக கூறும் பொழுது
“2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப்பின் கேப்டன் பகுதியில் இருந்து விலகினேன். ஆனால் அதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் எனக்கு கேப்டன் பதவி தேடி வந்தது. நாங்கள் நாடு திரும்பிய பிறகு இந்த தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம். ஒருவேளை நான் கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால், அதனை வெளிப்படையாகவே அறிவிப்பேன் எதையும் மறைக்க வேண்டியதில்லை.

- Advertisement -

ஆனால் தற்போது வரை நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து சிந்திக்கவில்லை. ஒரு வீரரால் நாங்கள் எந்த ஆட்டத்திலுமே தோற்கவில்லை. நாங்கள் வெற்றி பெறும் போதும், தோல்வியடையும் போதும் ஒரு அணியாகவே தோற்று இருக்கிறோம். ஆனால் தோல்வியடைந்தால் கேப்டன் மீது தான் குறை கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் அணிகள்.. தேதி மற்றும் இடம்.. முழு விபரம்

ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. ஒரு அணியில் 11 வீரர்கள் விளையாடுகிறார்கள் என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதற்காகத்தான் அவர்கள் உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் ஒன்றாக இணைந்து விளையாடாததே நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம்” என்று பாபர் ஆசம் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles