பண்ட் நீங்க தயவு செஞ்சு இப்படிலா பண்ணாதீங்க.. விராட் ரோஹித்னால முடிலனா அடுத்து நீங்கதான்- பயிற்சியாளர் அறிவுரை

இன்று நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதியை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணியும், தொடரில் இருந்து வெளியேறாமல் இருக்க ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொள்வதால் இப்போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சூரியகுமார் யாதவியின் சிறு வயது பயிற்சியாளரான அஸ்வால்கர் இந்திய அணிக்கு சில அறிவுரைகளையும், கருத்துக்களையும் வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியினை பொறுத்தவரை இந்த டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பதிவு செய்து இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சந்திக்க இருக்கிறது. பேட்டிங்கில் மிக வலுவாக காணப்படும் இந்திய அணி எட்டாவது விக்கெட் வரை பேட்டிங் நீண்டு கொண்டிருப்பது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். மேலும் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் மிக வலு சேர்க்கிறார்கள்.

- Advertisement -

சர்வதேச அணிகளில் மற்றொரு முன்னணி அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணி முந்தைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி அரையிறுதி பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் அணியின் கேப்டன் மார்ஸ் “நாங்கள் வீழ்த்துவதற்கு இந்தியாவை விட வேறு நல்ல அணி கிடைக்காது” என்று சற்று மெத்தனத்தில் பேசியிருப்பது கவனிக்க கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சூரியகுமார் யாதவின் சிறுவயது பயிற்சியாளர் ஆன அஸ்வால்கர் இந்திய அணிக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மிக நிதானமான தொடக்கத்தையே ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வேகமாக ஆரம்பித்தால் அதைவிட சிறந்த விஷயம் என்று எதுவும் இல்லை.

- Advertisement -

மேலும் கடந்த ஐந்து போட்டிகளாக எப்படி விளையாடினோமோ அதே போன்று இந்த முறையும் விளையாட வேண்டும். எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்கக் கூடாது. ரிஷப் பண்ட் இந்திய அணியின் பவர் ஹிட்டர். நான் அவருக்கு வழங்கக்கூடிய ஒரே ஒரு அறிவுரை என்னவென்றால் ரிவர்ஸ் ஷாட்கள் எல்லாம் விளையாட வேண்டாம். உங்களிடம் பவர் ஹிட்டிங் திறமை இருக்கிறது. அதற்குத் தகுந்தவாறு நீங்கள் விளையாடினாலே எளிதாக ரன்கள் குவிக்க முடியும்.

இதையும் படிங்க:10 வருட தவம்.. அந்த 1 நாளுக்கு காத்திருக்கும் தென்னாபிரிக்கா.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே அது சிறந்தது” என்று கூறி இருக்கிறார். இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான போட்டி இன்று இரவு 8 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles