10 வருட தவம்.. அந்த 1 நாளுக்கு காத்திருக்கும் தென்னாபிரிக்கா.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

இன்று நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கால் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

சொந்த மண்ணில் போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியோடு உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறியது.

- Advertisement -

ஆன்ட்டி குவாவில் நடைபெற்ற ஐம்பதாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாய் ஹோப் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேயர் 34 பந்துகளில் 35 ரன்கள் குவித்து வெளியேற, நட்சத்திர ஆட்டக்காரரான பூரான் மூன்று பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் களமிறங்கிய சேஸ் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில், மூன்று பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 52 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது. தென்னாபிரிக்க அணித்தரப்பில் ஷம்சி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பிறகு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 17 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிகாக் 7 பந்துகளில் 12 ரன்கள், கேப்டன் மார்க்ரம் 15 பந்துகளில் 18 ரன்கள், குவித்து வெளியேற மிடில் வரிசை பேட்ஸ்மேன்களான கிளாசன் மற்றும் ஸ்டெப்ஸ் ஆகியோர் நிலைத்து நின்று தென்னாபிரிக்க அணிக்கு ரண்களை குவித்தனர்.

- Advertisement -

கிளாஸன் 10 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரரான ஸ்டெப்ஸ் 27 பந்துகளில் 29 ரன்கள் குவித்து வெளியேற கடைசி ஓவரில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டன. மெக்காய் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய மேர்கோ ஜான்சன் தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். ஜான்சன் 14 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 21 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையும் படிங்க:எனக்கு இவர் பந்து வீசும் போது கண்ணே தெரியல.. ஆனா ரோகித் தரமா ஆடுனாரு.. அப்பதான் அவர் கிளாஸ் எனக்கு புரிஞ்சது- நித்திஷ் ராணா பேட்டி

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 வரலாற்றில் தென்னாபிரிக்கா அணி 10 வருடங்கள் கழித்து மீண்டும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறையாவது டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அந்த ஒரு நாளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி சோகமாக இந்த போட்டியோடு வெளியேறியது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles