2014ல் இருந்து நான் இதுக்காக நிறைய உழைத்துள்ளேன்.. என்னுடைய கேப்டன் பொறுப்பு இவர் போலத்தான் இருக்கும் – சூரியகுமார் பேட்டி

டி20 ஃபார்மெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வினை அறிவித்த பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கில் கேப்டனாக செயல்பட்டார். அவருக்கு பிறகு தற்போது சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக மாறி இருக்கிறார்.இந்த சூழ்நிலையில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கேப்டன் பதவி குறித்து சூரியகுமார் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கௌதம் கம்பீரின் கீழ் சூரியகுமார் யாதவ் விளையாடினார். அதற்குப் பிறகு கொல்கத்தா அணி இவரை ஏலத்தில் எடுக்காமல் போக மும்பை அணி இவரை வாங்கியது. அதற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறிய சூரியகுமார் யாதவ் அதற்கு பிறகு ரோகித் சர்மாவின் உந்துதலில் இந்திய அணியிலும் அறிமுகமானார்

- Advertisement -

அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட போதிலும், அதில் தோல்வியை தழுவாமல் கேப்டனாக வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். கேப்டனாக செயல்பட்டாலும் இவரது பேட்டிங் எந்த விதத்திலும் பாதிப்பு அடையவில்லை. மேலும் அணியை வழிநடத்துவதிலும் இவரது பங்கு முக்கியமாக இருப்பதால் கௌதம் கம்பீர் இவரை நம்பி கேப்டன் பதவியை ஒப்படைத்து இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தொடங்கும் இவரது பயணம் அடுத்த டி20 உலக கோப்பை வரை தொடரும் என்று நம்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தனது கேப்டன்சி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கேப்டன் பதவியை பொறுத்தவரையில் தான் ரோகித் சர்மாவிடம் இருந்து தான் அதிகமாக கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் 10 ஆண்டுகளாக இதற்காக கடுமையாக உழைத்துள்ளேன் என்றும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “ரோகித் சர்மா தான் என்னுடைய கேப்டனாக இருந்தார். அவரது தலைமையின் கீழ் நான் கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எனவே என்னுடைய பாணியும் அவரைப் போலவே இருக்கும். 2014ஆம் ஆண்டு என்னுடைய கிரிக்கெட் பயணம் ஆரம்பித்தது. அன்றிலிருந்து தற்போது வரை 10 ஆண்டுகளாக நான் மிகக் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க:பிசிசிஐ எனக்கு வாய்ப்பு தரலையா?. ப்ளேயர்ஸ்கிட்ட பாகுபாடு காட்டுறாங்களா – நடராஜனின் தெளிவான பதில்

இந்த நிலையில் நான் கேப்டன் பதவி குறித்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக ரோகித் சர்மாவிடமிருந்து நான் அதிகமாக கற்றுக் கொண்டேன் என்று தான் கூற வேண்டும். எனவே எனது பணியை நான் சிறப்பாக செய்ய தயாராக இருக்கிறேன்” என்று சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தற்போது டி20 ஃபார்மெட்டில் ஓய்வு பெற்ற முக்கிய மூன்று வீரர்களின் இடங்களை நிரப்பவும் வீரர்களை காண வேண்டிய கட்டாயமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles