பிசிசிஐ எனக்கு வாய்ப்பு தரலையா?. ப்ளேயர்ஸ்கிட்ட பாகுபாடு காட்டுறாங்களா – நடராஜனின் தெளிவான பதில்

தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், சில வருடங்களுக்கு முன்பாக இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சிறப்பான பங்களிப்பை அளித்தார். அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கான வாய்ப்புகளை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டை எழுந்து வரும் நிலையில், அதற்கான விரிவான விளக்கத்தை நடராஜன் தற்போது அளித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழகத்தின் டிஎன்பிஎல் தொடரில் கலக்கிய சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன், அந்தத் தொடரில் நன்றாக செயல்பட்டதன் மூலமாக இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் வாய்ப்பு பெற்றார். அந்தத் தொடரிலும் தனது சிறந்த பந்துவீச்சு திறனை காண்பித்ததால் 2021ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வலைப்பந்துவீச்சாளராக அழைத்துச் செல்லப்பட்டார்.

- Advertisement -

அப்போது டெஸ்ட் தொடரின் போது, சில முக்கிய பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக வெளியேற நடராஜனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி மேலும் ஒரு நாள் டி20 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஆனால் அதற்குப் பிறகு ஏற்பட்ட காயத்தின் காரணமாக வெளியேறிய சூழ்நிலையில், தற்போது வரை அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் சமீபத்திய வருடங்களில் ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டு வரும் போதிலும் இந்திய டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த அணியில் இவர் சேர்க்கப்படவில்லை.

அதற்கு அடுத்து நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும், தற்போது நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. தமிழக வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்று முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில் அது குறித்து நடராஜன் விளக்கம் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:இவருக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.. ஆனா எனக்கு புடிச்ச கேப்டன் அவர் இல்லை – ஜஸ்பிரித் பும்ரா பேட்டி

நடராஜன் அது குறித்து கூறும் போது “இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான வாய்ப்புகளை அளித்தது. காயம் காரணமாகத்தான் என்னால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற முடியவில்லை. கிரிக்கெட்டில் எந்தவித அரசியலும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களிடமும் எந்த ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பினால் தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகியுள்ளேன்” என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles