களம் இறங்கிட்டான் 2.0.. ஆளே மாறிட்டான்.. கண்டிப்பா பெரிய ஆளா வருவான்.. இளம் வீரரை பாராட்டிய சூரியகுமார் யாதவ்

ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இங்கு திறமையான இளம் வீரர்களுக்கு பஞ்சமே இருக்காது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் இருந்து தங்கள் திறமையினை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு பெறுகின்றனர். அப்படி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை மிகச் சரியாகப் பயன்படுத்தி ரசிகர்களின் முன்னால் தங்கள் திறமையினை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டாராக உருவெடுக்கின்றனர்.

- Advertisement -

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டை பயன்படுத்தி ஸ்டார் ஆன வீரர்கள் ஏராளம். உதாரணமாக எடுத்துக் கொண்டால் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, தற்போது உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ரிங்கு சிங் என்று நட்சத்திரங்கள் உருவாகிறார்கள்.

- Advertisement -

தற்போது அந்த வரிசையில் இணைந்திருப்பவர் 22 வயதான தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரியான் பராக்தான். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் விளையாட வந்து விட்டார். ஆனால் ஒரு சில போட்டிகளைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி இவரது பங்களிப்பு இருந்ததில்லை.

- Advertisement -

திறமை இருந்தும் அதனை வெளிக்காட்ட தவறி ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு உள்ளானார். ஆனால் இந்த 2024ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணிக்காக புதிதாக உருவெடுத்து வந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய இவர் 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். மேலும் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது அனுபவ வீரர் போல சூழ்நிலையை புரிந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

தற்போது இப்படி புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் ரியான் பராக்கை டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆன சூரியகுமார் யாதவே பாராட்டி இருக்கிறார். இவரைப் பற்றி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட சூர்யா
“தேசிய கிரிக்கெட் அகாடமியில் நான் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது காலில் லேசான காயத்துடன் ஒரு இளைஞன் பயிற்சி செய்வதை பார்த்தேன்.

- Advertisement -

அவர் கடும் உழைப்பை மேற்கொண்டு தனது உடற்தகுதியை மீட்கும் முயற்சியில் கடுமையாக பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவரைப் பார்த்துவிட்டு நான் எனது பயிற்சியாளரிடம் இவர் ஆளே மாறிட்டார் நிச்சயம் பெரிய ஆளா வருவார் என்று கூறினேன். நான் சொன்னதைப் போலவே இவரது ஆட்டத்தை இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறில்லை என்று உணர்ந்தேன். ரியான் பராக் 2.0 வந்துவிட்டார். இனி கவனம் அவர் மீது இருக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிக்கலாமே : கேரளால இவர பத்திதான் கேக்குறாங்க.. பெரிய பெயரா மாறிட்டு வராரு.. சஞ்சு சாம்சன் பேட்டி

எனவே மீதமுள்ள ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி நட்சத்திர வீரராக உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். எனவே சூரியகுமார் யாதவ் சொன்னதை போலவே இவரது 2.0 அதிரடியை இனிமேல் காணலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles