பாகிஸ்தான்னாலே அலர்ஜியா.? 5 போட்டியிலும் தொடர்ந்து சொதப்பும் சூரியகுமார் யாதவ்.. விளாசும் ரசிகர்கள்

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதில் இந்திய அணி நிச்சயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பாகிஸ்தான் அணி வீரர்களின் அபார வேகப்பந்து வீச்சனை தாக்குப்பிடிக்க முடியாமல் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை எப்போதுமே வலிமையான பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலும் தங்களது திறமையை நிரூபித்தனர்.

- Advertisement -

அதற்குப் பிறகு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் அதி அற்புதமான அபார பந்துவீச்சால் 113 ரன்கள் மட்டுமே குவித்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டி முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களால் மட்டுமே வெற்றி பெற்றதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பேட்டிங்கில் ரிஷப் பண்ட் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி 42 ரன்கள் குவித்தார்.

இப்போட்டியின் மூலம் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு வீரர் சூரியகுமார் யாதவ். டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக வலம் வரும் சூரியகுமார் யாதவ், இந்த போட்டியில் எட்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து ஏழு ரன்களில் வெளியேறினார். சர்வதேச போட்டிகளில் மற்ற அணிகளுக்கு எதிராக ஓரளவு நன்றாக விளையாடும் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

- Advertisement -

இதுவரை ஐந்து முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி உள்ள அவர்,11, 18, 15, 13, 7 சொற்ப ரன்களிலேயே தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரது பேட்டிங் ஆவரேஜும் மோசமான நிலையிலேயே உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரிலும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு ரன்னில் வெளியேறி இருக்கிறார்.

இதையும் படிங்க:இதே மக்கள்தான் என்னை குறை கூறினார்கள்.. நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.. பும்ரா சிறப்பு பேட்டி

இதனால் இந்திய அணி இவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து நிச்சயம் கவனம் கொள்ளும். எனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்பாக இவர் பார்முக்கு வர வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் அடுத்த சுற்றில்தான் இந்தியாவுக்கான உண்மையான ஆட்டங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பலமான அணிகளே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் அணியில் உள்ள அனைவருமே நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது அவசியம். இந்திய அணி தனது அடுத்த போட்டியை வருகிற 19ஆம் தேதி அமெரிக்க அணியை இதே நியூயார்க் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles