இதே மக்கள்தான் என்னை குறை கூறினார்கள்.. நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.. பும்ரா சிறப்பு பேட்டி

மிக முக்கிய போட்டியாக கருதப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரணமான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பும்ராவின் பந்துவீச்சு குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக அமைந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு பின்னர் பேசிய பும்ரா தான் காயமடைந்த போது சந்தித்த விமர்சனங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

நியூயார்க் ஆடுகளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே குவித்தது. போட்டியின் 15 வது ஓவர் வரை நன்றாக சென்று கொண்டிருந்த இந்திய அணிக்கு அதற்கு பிறகு விக்கெட்டுகள் விழுந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் ரிஷப் பண்ட் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறினர்.

- Advertisement -

குறிப்பாக பந்துவீச்சில் பலம் கொண்ட பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது வேலையை செய்யத் தவறி விட்டனர். இருப்பினும் பும்ராவின் கையில் எப்போதெல்லாம் ரோகித் சர்மா பந்தை கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் ரோகித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றும் படி பும்ரா விக்கெட்டுகளை எடுத்து விடுகிறார்.

அதிலும் குறிப்பாக ஆறு ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 15 வது ஓவரில் ரிஸ்வானின் விக்கட்டை பும்ரா வீழ்த்திய பிறகுதான், போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. மேலும் மூன்று மிக முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் தான் முன்பு காயம் அடைந்து இருந்த போது எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“இதற்கு முன்பு நான் காயமடைந்திருந்த போது இதே மக்கள் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி நான் பந்து வீச மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் அதை எல்லாம் பெரிதாக காதில் வாங்கிக் கொள்ளவில்லை. காயத்திலிருந்து எவ்வாறு மீண்டு வருவது, திரும்பவும் என்னை சரி செய்து கொள்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினேன்.

இதையும் படிங்க:கண்ணீர் விடும்போது ஆறுதல் படுத்தும் மனசு இருக்கே.. அதுதான் சார் கடவுள்.. ரோஹித் சர்மாவை பாராட்டும் ரசிகர்கள்

இன்றைய போட்டியில் கூட எது விக்கெட் வீழ்த்த நல்ல பந்தாக இருக்கும்? எந்த மாதிரியான பந்து இவர்களுக்கு ரன்கள் அடிக்க சிரமமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் என் கவனத்தை சிதறவிட வேண்டாம் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles