ரெய்னா 58 ரன் 33 பந்து.. தங்கத்தை தகர டப்பா நினைச்சிட்டீங்களே.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் விமர்சனம்

இந்தியன் வெட்டரன் பிரீமியர் லீக் இரண்டாவது அரையிறுதி டி20 போட்டியில் உத்தரப்பிரதேச அணி சட்டீஸ்கர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. உத்திரப்பிரதேச அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

இந்தியாவின் மூத்த வீரர்கள் கலந்து கொள்ளும் லீக் தொடரான இந்தியன் வெட்டரன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொண்ட இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

இதன் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை அணி, டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவது அரை இறுதிப் போட்டி மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தீர்மானித்த சத்தீஸ்கர் அணி உத்திரபிரதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதில் உத்தரப் பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை குவித்தது. குறிப்பாக அந்த அணியின் பவான் நெகி 50 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஆறு சிக்ஸர்கள் என விளாசி 94 ரன்கள் குவித்தார்.

மறுபுறம் உத்தரப்பிரதேச அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தனது அதிரடியை வெளிப்படுத்தினார். 33 பந்துகளில் 58 ரன்களைக் குவித்த அவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் என விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடிய ஆட்டங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தது.

- Advertisement -

இப்போட்டியின் மூலம் தான் பிட்டாக இருப்பதை நிரூபித்த சுரேஷ் ரெய்னா மீண்டும் ஒருமுறை சென்னை ஜெர்சியை அணிந்து ஐபிஎல் விளையாட மாட்டாரா? என்று ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இப்படிப்பட்ட வீரரை சென்னை அணி கழட்டி விட்டதே என்று ரசிகர்கள் சென்னை அணியின் மீது தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர். அவரின் இந்த அதிரடி ஆட்டம் வீடியோவாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பின்னர் 204 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சத்தீஸ்கர் அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் உத்தரப் பிரதேச அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இதில் மும்பை அணியும் உத்தரப்பிரதேச அணியும் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles