இந்த சிஎஸ்கே வீரர் தோனி, யுவராஜ் மாதிரி.. எப்படியாச்சும் இவரை பிளேயிங் லெவனில் கொண்டு வாங்க.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி அமெரிக்காவில் மிக தீவிரமாக தயாராகி வருகிறது. ஒரு நற்செய்தியாக அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் இறுதியான பிளேயிங் லெவன் அப்போதுதான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இந்த சிஎஸ்கே வீரரை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கங்குலி முதல் ஸ்ரீகாந்த் வரை அனைவரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க இருப்பதால் இந்திய அணி புதிய மாறுதலாக விராட் கோலி உடன் துவங்குமா? அல்லது ஜெய்ஸ்வாலையே களமிறக்குமா? என்பது தெரியவில்லை.

- Advertisement -

அப்படி விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் நம்பர் 3 வரிசையில் சூரியகுமார் யாதவ் களமிறங்குவார். அவருக்கு அடுத்ததாக மிடில் ஆர்டரில் சிவம் துபே களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தொடர்களில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு அனுபவம் குறைவு என்பதால் விராட் கோலிதான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா விராட் கோலி எந்த மாறுதலும் இல்லாமல் மூன்றாவது வரிசையிலேயே களமிறங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது குறித்து சுரேஷ் ரெய்னா விரிவாக கூறும்பொழுது
“என்னை பொருத்தவரை விராட் கோலியை மூன்றாவது வரிசையிலே களம் இறக்க வேண்டும். பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலிதான்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் போது கோலி சிறந்த ஃபார்மில் இருந்தார். தற்போது தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்ராலும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இளம் வீரராக இருப்பதால் ஜெய்ஸ்வால் அச்சமின்றி பேட்டிங் செய்யக் கூடியவர். இந்திய அணியில் சிவம் துபேவை எப்படியாவது களம் இறக்க வேண்டும். ஏனெனில் துபேவிடம் இருக்கும் சிக்ஸர் அடிக்கும் திறமை அரிதானது. முன்காலத்தில் சிவம் தூபே போல யுவராஜ் சிங் மற்றும் தோனி ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

இதையும் படிங்க:சிஎஸ்கே, மும்பையை விட நாங்கள் ஒரு படி மேலே இருக்க வேண்டும்.. கேகேஆர் ஆலோசகர் கௌதம் கம்பீரின் ஆசை

இந்திய அணியின் டிரம்ப் கார்ட் சிவம் துபே தான். ஒருவேளை ஜெய்ஸ்வால் இருந்தால் நிச்சயமாக ஒரு ஆல் ரவுண்டரை இந்தியா இழக்க நேரிடும். இந்த கடினமான முடிவை ரோகித் சர்மாதான் எடுக்க வேண்டும். ஏனெனில் சிவம்தூபே இருந்தால் 30 முதல் 40 ரன்கள் வரை இந்திய அணிக்கு எளிதாக கிடைக்கும்” என்று ரெய்னா கூறி இருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் பொருத்தவரை இந்திய சர்வதேச அணிக்காக சதம் அடித்த ஒரே வீரர் ரெய்னாதான்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles