இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதில் முதல் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் பட்டேல் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலகக் கோப்பைக்கு முன்னர் நடைபெறும் கடைசி டி20 தொடர் இது என்பதால் தேர்வாளர்களின் மத்தியில் அக்சர் பட்டேல் அதிக கவனத்தை பெரும் வகையில் இருக்கிறார். மேலும் பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு வரும் நிலையில் உலகக் கோப்பைக்கு இவரது இடம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விடும்.
ஜடேஜாவின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பங்களிப்பு தற்போது சீரான நிலையில் இல்லை. எனவே வரும் ஐபிஎல்இல் அவரது செயல் திறனை பொறுத்து உலகக்கோப்பையில் அவரது இடம் உறுதி செய்யப்படுமா? என்பது குறித்து தெரியவரும். எனவே உலகக்கோப்பை தேர்வு குறித்து பிரக்யான் ஓஜா ஒரு பந்துவீச்சாளர் அல்லது ஆல் ரவுண்டர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்படுவது அவரது விளையாட்டுத் திறனை மேலும் அதிகரிக்கும்.
அவருடைய விளையாட்டு விழிப்புணர்வு எப்போதும் அப்படியே இருக்கும். ரவீந்திர ஜடேஜா ஒரு சிறந்த ஆல் ரவுண்டர். ஆனால் அக்சர் பட்டேல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறி இருக்கிறார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா கலர்ஸ் சினி பிளக்ஸில் நடந்த விவாதத்தில் இந்திய அணியின் ஆல் ரவுண்டருக்கான போட்டி குறித்து கேட்கப்பட்டது.
அது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில்
“அக்சர் பட்டேல் பவர் பிளேயரில் பந்து வீசும் பவுலராக இருக்கிறார். மேலும் பேட்டிங் செய்யும்போது எல்லாம் சிறப்பாக செயல்படுகிறார். ஓஜா ஒரு இடது கை பந்துவீச்சாளர் என்பதால் இதுகுறித்து அவருக்கு நன்கு தெரியும். எனவே உலக கோப்பையில் அவரது இடம் உறுதி செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.
ஜடேஜாவை பற்றி பிசிசிஐ எவ்வளவு யோசிக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஐபிஎல் செயல்பாடுகள் பொருத்தே அவரது டி20 உலக கோப்பைத் தேர்வு குறித்து இறுதி செய்யப்படும். ஜடேஜா ஒரு சிறந்த ஆல் ரவுண்டர். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அக்சர் பட்டேல் தற்போது வேகமாக முன்னேறி வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.
அக்சர் பட்டேல் 49 டி20 போட்டிகளில் விளையாடி 7.34 எக்கனாமி பந்துவீச்சில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

