சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு செய்த செயல் தற்போது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரேல் உதவியுடன் ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் குவித்தது.
ரியான் பராக் 47 ரன்களும் ஜுரேல் 28 ரன்களும் குவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதரப்பில் பஞ்சாப்பை சேர்ந்த சிமார்ஜித் சிங் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் நங்கூரமாக ஒரு முனையில் நின்று விளையாட மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட, 18 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய ருத்ராஜ் 41 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் மூன்று இடங்களில் முறையே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இருக்கும் போது நான்காவது இடத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இனிவரும் அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டி என்பதால் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் வந்து ரசிகர்களை நோக்கி டென்னிஸ் பேட் மூலம் பந்துகளை எறிந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார். அப்போது அங்கு கலந்து கொண்ட சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனியை கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:ஆரஞ்சு தொப்பியை விட அணிதான் முக்கியம்.. ருத்ராஜ் எடுத்த முடிவு.. பாராட்டி வரும் ரசிகர்கள்
பின்பு சிறிது நேரம் உரையாடிவிட்டு தோனி பேட்டை அவர் கையில் கொடுத்து அடிக்க சொல்ல, ரெய்னாவும் மகிழ்வாக பேட்டை வாங்கி பந்துகளை ரசிகர்கள் நோக்கி எறிந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் ஆஸ்தான வீரரான சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி பல முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.
VIDEO OF THE DAY…!!! 💛
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2024
MS Dhoni and CSK thanking Chepauk crowd – Suresh Raina hugging MS. 🫂❤️pic.twitter.com/t1y5TbtfHm

