ஆரஞ்சு தொப்பியை விட அணிதான் முக்கியம்.. ருத்ராஜ் எடுத்த முடிவு.. பாராட்டி வரும் ரசிகர்கள்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் 41 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்ற விதத்தை ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஏழாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

சென்னை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவின் அபாரமான பந்து வீச்சு மற்றும் மைதானத்தின் சூழ்நிலையால் அந்த அணியால் குறைவான ரன்களை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் மட்டும் 35 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். இதில் மூன்று சித்தர்களும் அடங்கும்.

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிமர்ஜீத் சிங் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருத்ராஜ் ஒரு முனையில் நங்கூரம் போல நிலைத்து நின்று விட்டு மறுமுனையில் சென்னை பேட்ஸ்மேன்களை அதிரடியாக ஆட வழி வகுத்து கொடுத்தார்.

எதிர்பாராத நேரத்தில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறி விட்டால் சிஎஸ்கேவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இந்த சூழ்நிலையை நன்கு உணர்ந்து கொண்டு ரன்களை ரொட்டேட் செய்வதில் மட்டும் குறியாக இருந்தார். இதற்குத் தகுந்தவாறு மற்ற பேட்ஸ்மேன்களும் தங்களால் முடிந்த அளவு அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

இதில் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்கள், சிவம் துபே பதினோரு பந்துகளில் 18 ரன்கள், சமீர் ரிஸ்வி எட்டு பந்துகளில் 15 ரன்கள், மேலும் டாரில் மிச்சல் 13 பந்துகளில் 22 ரன்கள் குவித்தனர். ஒரு முனையில் நிதானமாக விளையாடிய ருத்ராஜ் 41 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் குவித்தார். 29 பந்துகள் வரை பவுண்டரியே அடிக்காத இவர், அதற்கு பின்னால்தான் இரண்டு சிக்சர்களை விளாசினார் என்று குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு.. தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றி.. டெல்லியை பந்தாடிய பெங்களூரு.. சொந்த மைதானத்தில் மாஸ் காட்டும் ஆர்சிபி

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ருத்ராஜ் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 541 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 634 ரன்கள் குவித்து முதல் இடத்திலும் இருக்கின்றார். ருத்ராஜ் நினைத்திருந்தால் இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி விராட் கோலியை நெருங்கி இருக்க முடியும். ஆனால் தனது சொந்த சாதனைக்கு இடம் கொடுக்காமல் அணியின் நலன் கருதி வெற்றிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தெளிவாக செய்த ருத்ராஜை தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles