நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தற்போதைய அணி குறித்து தனது ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
ஐந்து முறை ஐபிஎல் தொடரில் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. இனி வரும் ஆறு போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றால் மட்டுமே 8 வெற்றிகளோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது குறித்து நினைத்துப் பார்க்க முடியும். சிஎஸ்கே அணியில் குறிப்பாக அதிரடியாக விளையாடக்கூடிய பவர் ஹிட்டர்கள் இல்லாதது அணிக்கு ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக டாட் பால்கள் விளையாடுவது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரரும் இந்திய முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா தனது வருத்தத்தை கூறி இருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி இந்த முறை தான் மிகவும் பலவீனமாக இருப்பதாக இப்படி ஒரு அணியை தான் பார்த்ததில்லை எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா விரிவாக கூறும்போது “வெற்றி பெறுவதற்கான பசி சென்னை அணியில் நான் யாரிடமும் பார்க்கவில்லை. நான் யாரையும் நான் மரியாதை குறைவாகவோ தவறாகவோ பேசவில்லை. ஆனால் சிஎஸ்கே அணிக்காக நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் பிராண்ட் தற்போது இல்லை. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போது நாங்கள் அதிக அளவு டாட் பந்துகளை விளையாட மாட்டோம். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாடுவதே வெற்றிகளை தேடி கொடுக்கும்.
இதையும் படிங்க:லக்னோ உரிமையாளர் முன் மாஸ் காட்டிய கேஎல் ராகுல்.. லக்னோவை ஓடவிட்ட டெல்லி அணி.. ரிஷப் பண்ட் பரிதாபம்
நாங்கள் அடிப்படையான கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் 6 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை ஆடினோம். டெத் ஓவர்களில் அடித்து விளையாடதற்கு எம்எஸ் தோனி மற்றும் அல்பி மோர்கல் போன்ற அதிரடியான வீரர்கள் இருந்தனர். அவர்கள் எடுப்பது சிறிய ரன்கள் ஆக இருந்தாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவார்கள். இது போன்ற விஷயங்களை செய்து தான் சிஎஸ்கே அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றோம்” என்று கூறியிருக்கிறார்.

