அந்த வீரர் அப்படி என்ன ஸ்பெஷல்.? தோனி, கோலியை கூட சந்திக்க மாட்டார்.. சந்தித்து நலம் விசாரித்த காவியா மாறன்.. ட்ரெண்டாகி வரும் வீடியோ

நேற்று நடைபெற இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து உற்சாகமாக இருந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரான கேன் வில்லியம்சனை சந்தித்து நட்பு பாராட்டி இருப்பது பலரிடையே ஆச்சரியத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாகவே சன்ரைசர்ஸ் அணியின் பங்களிப்பு சுமாராக இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பேட் கம்மின்சை 20 கோடி ரூபாய்க்கு வாங்கி அவரையே கேப்டனாகவும் நியமித்தது. அவரது கேப்டன்ஷியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்று அசத்தி இருக்கிறது.

- Advertisement -

சன்ரைசர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை அடுத்து உற்சாகமடைந்த அந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் நேற்றைய போட்டி நடைபெறாமல் தடைபட்டாலும் ஒரு புள்ளி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதனால் உற்சாகமாகவே மைதானத்திற்குள் வளம் வந்தார். பொதுவாக காவியா மாறன் எந்த அணி வீரர்களிடமும் நட்பு பாராட்ட மாட்டார்.

மேலும் சொந்த அணியின் வீரர்கள் ஓய்வறைக்கும் கூட செல்ல மாட்டார். போட்டி முடிந்த உடன் அங்கிருந்து கிளம்பி விடும் காவியா மாறன் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேன் வில்லியம்சனை சந்தித்து சிறிது நேரம் உரையாடி இருக்கிறார். முன்னணி ஜாம்பவான்கள் ஆன விராட் கோலி, ரோஹித் சர்மா, மகேந்திர சிங் தோனி ஆகியோரை கூட சந்திக்காத காவியா மாறன் கேன் வில்லியம்சனை சந்தித்து பேசியது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

கேன் வில்லியம்சனை சந்தித்து அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. சன்ரைசர்ஸ் அணிக்காக முதலில் கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னருடன் நட்பில் இல்லாத சன்ரைசர்ஸ் நிர்வாகம் வில்லியம்சன் உடன் நட்பில் இருப்பது பலரிடையே ஆச்சரியத்தையும் அதே வேளையில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க:ஆர்சிபி ப்ளீஸ்.. இவரை மட்டும் விட்ராதீங்க.. அவரை பொது ஏலத்தில் வைத்து ரிஸ்க் எடுக்க நான் விரும்ப மாட்டேன்.. ஸ்காட் ஸ்டைரிஸ் அறிவுரை

சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த போட்டியை பஞ்சாப் அணியோடு மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என சன்ரைசர்ஸ் அணி சிறந்து விளங்குவதால் இந்த முறை ஐபிஎல் கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என்ற அனைவராலும் கருதப்படுகிறது. மேலும் சன்ரைசர்ஸ் அணியில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இல்லாததால் உலகக்கோப்பையால் பாதியில் வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அந்த அணி வீரர்களுக்கு இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles