நடப்பு ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பங்களிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். முதல் பாதியில் சுமார் ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி இருக்க வேண்டிய அணி தற்போது பிளே ஆப் சுற்றில் நீடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதற்குக் காரணம் ஆர்சிபி வீரர்கள் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டதன் விளைவு தற்போது ஐந்து வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஆர்சிபி இந்த வீரரை மட்டும் விடக்கூடாது கண்டிப்பாக தக்க வைத்து ஆக வேண்டும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியிருக்கிறார்.
ஆர்சிபி முதல் பாதியில் செய்த தவறுகளை இரண்டாம் பாதியில் சரியாக திருத்தியது. பந்துவீச்சில் தயால், சிராஜ், கரண் ஷர்மா மற்றும் சொப்னில் சிங் ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினார்கள். அதேபோல பேட்டிங்கிலும் வில் ஜாக்ஸின் வருகைக்குப் பிறகு அவர் சிறப்பாக விளையாட இந்திய வீரரான ராஜத் பட்டிதார் மிக அற்புதமான பேட்டிங் ஃபார்மில் வந்தார்.
தொடக்கத்தில் சரியாக செயல்படாத அவர், அதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்களை விளாசி தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் பெரிய நம்பிக்கையை அளித்துக் கொண்டிருக்கிறார். விராட் கோலி எப்போதும் போல அவரது வேலையை சிறப்பாக செய்து வரும் வேளையில், ஆர்சிபி அடுத்த ஆண்டு தக்க வைப்பதற்கான நான்கு வீரர்களில் பட்டிதார் பெயர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ரஜத் பட்டிதார் கடந்த சீசனில் எவ்வாறு சென்றாரோ திரும்பவும் அதே போல அசுர வேகத்தில் தன் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என்று எங்களுக்கு முன்பே தெரியும். நான் ஆர்சிபி அணியின் பொறுப்பாளராக இருந்தால் நான்கு வீரர்களில் அவரது பெயரை நிச்சயம் தக்க வைப்பேன்.
அவரைச் சுற்றி பெரிய பெயர்கள் உள்ளன. ஆனால் நான் அவரை நிச்சயமாக தக்க வைப்பேன். அவர் அடுத்த எதிர்காலம் என்பதால் அவரை பொது ஏலத்தில் வைத்து அதிக ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. மேலும் நீங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வேன். வருடத்திற்கு வருடம் அவரது முன்னேற்றம் ஆச்சரியத்தைக் கூட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:முதல் பந்தில் இருந்தே கிளீன் ஹிட் அடிக்கிறார்.. தனிப்பட்ட முறையில் தோனி இதைச் செய்ய வேண்டும்.. பயிற்சியாளர் மைக் ஹசி பேட்டி
பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரே ஒரு போட்டி சென்னை அணியுடன் இருப்பதால் இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளே ஆப் சுற்றிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் பெங்களூர் அணி செய்த சாதனையை போன்று ஐபிஎல் தொடரில் வேறு எந்த அணியும் சாதனை செய்து இருக்காது.

