ஸ்டேடியம் எங்களோடதுதான்.. ஆனா தோனிக்கு இருக்கிற மாஸ் வேற.. வெற்றிக்குப் பின்னர் கம்மின்ஸ் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் டோனி பேட்டிங் செய்யக் களத்திற்கு வந்தபோது அப்போது ரசிகர்கள் எழுப்பிய சத்தம் இதற்கு முன்னர் நான் கேட்டதில்லை என்று சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

டாஸ் இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து இருந்தது. ஆடுகளம் தொடக்கம் முதலே மெதுவாக இருந்ததால் சென்னை அணி வீரர்களால் பெரிதாக ரன்களை குவிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சிவம் தூபே மட்டும் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்து சென்னை அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு வந்த அனுபவ வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்தும், ரன்கள் குவிக்க முடியவில்லை. மூத்தவீரர் ரகானே 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். அதற்கு பிறகு களம் இறங்கிய ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதனால் 120 பந்துகளில் 165 ரன்கள் குவிக்க முடிந்தது.

- Advertisement -

இதற்குப் பின்னர் களம் இறங்கிய ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடுகளம் முழுக்க பேட்டிங்கு சாதகமாக மாறியது. அந்த அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்து தொடக்கத்திலேயே வெற்றியை சென்னை அணியிடமிருந்து பறித்து விட்டார். அதற்குப் பிறகு களம் இறங்கிய அனுபவ வீரர் மார்க்ரம் அரை சதம் அடித்து ஹைதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் 18.1 ஓவரில் சண்டை 166 ரன்கள் குவித்து வெற்றி இலக்கினை எட்டியது. வெற்றிக்கு பின்னர் பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தோனி களம் இறங்கிய போது அவருக்காக எழுப்பிய சத்தம் நான் இதற்கு முன்னர் கேட்டதில்லை என்று வியப்பில் பேசி இருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“வெவ்வேறு மண். ஆட்டம் போகப் போக வேகம் குறைந்து முதல் பாதியில் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், இரண்டாம் பாதியில் பேட்டிங்க்கு சாதகமாக மாறியது.

- Advertisement -

சிவம் தூபே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எப்போதுமே நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர். எனவே அவருக்கு எதிராக ஆப் கட்டர்களை பயன்படுத்த முயற்சி செய்தோம். போட்டியை பொறுத்தவரை முதல் விஷயம் எப்போதுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவது. ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவருக்கும் பந்து வீசுவது கடினம். ஒரு பந்துவீச்சாளராக நான் அதை விரும்ப மாட்டேன். மகேந்திர சிங் தோனி களம் இறங்கிய போது ரசிகர்களின் கரகோஷங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:பேட்டிங் பண்றப்போ நம்மதான் ராஜான்னு நினைச்சுக்கணும்.. அப்போ ஒரு தெம்பு வரும்.. ஆட்டநாயகன் சஷாங்க் சிங் பேட்டி

இதற்கு முன்னர் இது போன்ற சத்தத்தை நான் கேட்டதில்லை” என்று வியப்பில் கம்மின்ஸ் கூறியிருக்கிறார். மகேந்திர சிங் டோனி போட்டியில் களமிறங்கிய போது ரசிகர்களின் ஆரவாரம் 122 டிசிபல் அளவிற்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும் ரசிகர்கள் தோனியின் மேல் வைத்திருக்கும் பாசம் என்பது துளி கூட குறையாது என்பதற்கு இச்சான்று ஒரு உதாரணம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles