பேட்டிங் பண்றப்போ நம்மதான் ராஜான்னு நினைச்சுக்கணும்.. அப்போ ஒரு தெம்பு வரும்.. ஆட்டநாயகன் சஷாங்க் சிங் பேட்டி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன் சசாங்க் சிங் தனது பேட்டிங் குறித்து சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சகா ஆரம்பத்திலேயே வெளியேற, அதற்கு பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் கில்லுடன் ஜோடி சேர்ந்து, குஜராத் அணியின் ஸ்கோர் முன்னிலை பெற உதவினார். வில்லியம்சன் 26 ரன்களில் ஆட்டம் இழக்க அதற்கு பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 33 ரன்களைக் குவித்தார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ராகுல் திவெட்டியா தான் சந்தித்த 8 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் குவித்தார். மறுமுனையில் குஜராத் அணியின் கேப்டன் கில் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் ஆறு பவுண்டரி,நான்கு சிக்சர்கள் என 89 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தவான், ஜித்தேஷ் சர்மா, ஷாம்கரன், சிக்கந்தர்ராசா ஆகியோர் ஏமாற்றினர். பிரப் சிம்ரன் 35 ரன்களில் குவிக்க, அதற்குப் பின்னர் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்தார்.

இதற்கு பக்கபலமாக இருந்த அசுத்தோஸ் சர்மா 17 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்கள் விளாசினார். பின்னர் வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற பஞ்சாப் அணியின் சசாங்க் சிங் கூறும்பொழுது
“இந்த உணர்வு எனக்கு தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற சம்பவங்களை நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். அது இன்று நிஜமானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

நான் பேட்டிங் செய்ய களம் இறங்க வருவதற்கு முன்னர் என்னுடைய பயிற்சியாளர் என்னிடம் பந்தை பார்த்து அதற்கு தகுந்த மாதிரி ரியாக்ட் செய்யுமாறு என்னிடம் கூறினார்.மேலும் 200 ரன்கள் இரண்டு அணிகளுமே அடிக்கும் அளவுக்கு ஆடுகளம் பேட்டிங்க்கு நல்ல சாதகமாக இருந்தது. ரசித்கான் மோஹித் சர்மா ஆகியோர் ஜாம்பவான் வீரர்கள். ஆனால் நான் பேட்டிங் செய்ய வரும் பொழுது என்னைத்தான் பெரிய ஜாம்பவான் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி நான் நினைக்கும் பொழுது நமக்கு ஒரு புதிய தெம்பு கிடைக்கும்

இதையும் படிங்க:பெயர் கூட தெரியல.. சம்பவம் பண்ணிட்டு போய்ட்டாங்க.. தோல்விக்கு பின் கில் பேட்டி

கடந்த சீசனில் ஹைதராபாத் அணியில் விளையாடிய போது எனக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த முறை நிறைய வாய்ப்புகள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அணி ஊழியர்கள், உரிமையாளர்கள் என அனைவருமே ஆதரவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles