இவர் 2 வருஷமா இப்படித்தான் பேட்டிங் பண்ணிட்டு வராரு.. 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது நம்பவே முடியவில்லை.. வெற்றிக்குப் பின்னர் பேட் கம்மின்ஸ் பேட்டி

57வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி லக்னோ அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது. போட்டிக்கு பின்னர் சன்ரைசர்ஸ் அனையின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றிக்கான சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. லக்னோ அணியை பொறுத்தவரை மிடில் வரிசையில் களமிறங்கக்கூடிய பதோனி 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்ததாக பூரான் 26 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 48 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் மிகவும் மந்தமாகவே விளையாடினார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு பௌண்டரி ஒரு சிக்சருடன் வெறும் 29 ரன்கள் மட்டுமே குவித்தார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணிதரப்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். லக்னோ அணியின் பேட்டிங்கில் பூரான் மற்றும் பதோனி ஜோடி 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்ததே இந்த அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணி யாருமே எதிர்பாராத வகையில் 10 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பாரபட்சமின்றி லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 8 பவுண்டர்களும், ஆறு சிக்ஸர்களும் குவித்து 75 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் முப்பது பந்துகளில் 89 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது
“எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடுகளத்தை ஒருவேளை மாற்றி விட்டார்களோ? என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவிற்கு அவர்களது பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்கள் அவர்கள் பாணியிலேயே விளையாடி ஆட்டத்தை முடிக்கட்டும் என்று விட்டு விட்டோம். அபிஷேக்சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகிய இருவருமே நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள்.

- Advertisement -

நான் ஒரு பந்துவீச்சாளர் என்பதால் அவர்களுக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஹெட் கடந்த இரண்டு வருடங்களாகவே இது போல்தான் பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அவரது பேட்டிங் மரபான பேட்டிங் போல இருக்கவே இருக்காது. அதுபோல அபிஷேக் ஷர்மா சுழல் மற்றும் வேகம் என இரண்டுமே அசத்தக்கூடிய பேட்ஸ்மேன். இரண்டு பீல்டர்களை மட்டுமே வெளியில் வைத்துக் கொண்டு இவர்களுக்கு பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. தற்போது டி20 கிரிக்கெட் பொருத்த வரையில் ரன்கள் மிகவும் உயர்ந்து விட்டது.

இதையும் படிங்க:என்ன சொல்றதுனு தெரியல.. 240 ரன்கள் அடிச்சிருந்தாலும் தோத்துருப்போம்.. இந்த மாதிரி பேட்டிங் நான் டீவிலதான் பார்த்து இருக்கேன்.. தோல்விக்கு பின்னர் பேசிய கே எல் ராகுல்

அணி வீரர்கள் ரன்கள் எடுக்கச் செல்லும் போது அவர்களை தடுப்பது மிகவும் கடினமான காரியம். நிஜமாகவே பத்து ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது என்பது நம்ப முடியாததாகவே இருக்கிறது” என்று கூறுகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles