வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடர்களுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று அங்கு முக்கியமான தொடரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் இந்திய வீரர்கள் குறித்து தனது வெளிப்படையான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளார். மிடில் வரிசையில் களமிறங்கி விளையாடி வந்த ஸ்மித்தை தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தொடக்க வரிசையில் விளையாட வைத்திருக்கிறது. இருப்பினும் அவருக்கு தொடக்க வரிசை மிடில் வரிசையைப் போல பெரிதாக செட் ஆகவில்லை.
இந்த சூழ்நிலையில் மிடில் வரிசையில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இழந்து வரும் ஆஸ்திரேலியா நிர்வாகம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகும் தொடர் குறித்தும் இந்திய வீரர் விராட் கோலி குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி தனது எண்ணத்திலும், செயல்களிலும் ஒரு ஆஸ்திரேலியா வீரரை போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. அவர் கிரிக்கெட் களத்தில் சவால் விட்டு மோதுவதும் மற்றும் எதிரணியை விட தான் சிறப்பாக செயல்பட்டு மேலே வருவதில் ஆஸ்திரேலியா வீரர்களை போன்று இருக்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் விராட் கோலி குறித்து எதுவும் சிந்திப்பது கிடையாது.
எனது எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்துமே களத்தில் எப்படி செயல்படுவது மற்றும் ஆஸ்திரேலியா அணியை எப்படி பெற வைப்பது என்பதில் மட்டும்தான் இருக்கும். விராட் கோலி பழகுவதற்கு ஒரு மிகச் சிறந்த வீரர். மற்றும் ஒரு அற்புதமான மனிதர் நானும் அவரும் செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம்.
இதையும் படிங்க:நான் தான் இந்த கிரிக்கெட்டில் இருந்து விலகிட்டன்.. அடுத்த 2 ஆண்டுகளில் எல்லாம் தெரிந்துவிடும் – தன் எதிர்காலம் பற்றி தங்கராசு நடராஜன் !
இந்தக் கோடை காலத்தில் அவருக்கு எதிராக விளையாடுவது ஒரு அருமையான நிகழ்வு என்று ஸ்மித் கூறியிருக்கிறார். இரண்டு சிறந்த வீரர்கள் கொண்ட அணிகள் விளையாடும் இந்த போட்டித் தொடர் ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

