எங்க முதுகெலும்பு டிவால்ட் பிரிவிஸ் உடனே வேணும்.. ஆனா அவர் இப்பதான் திரும்பி வருவார் – பிளமிங் வெளியிட்ட தகவல்

சிஎஸ்கே அணியின் அதிரடி இளம் ஆட்டக்காரர் டிவால்ட் பிரிவிஸ் காயத்தால் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் எப்போது திரும்பி வருவார் என்பது குறித்து ஸ்டீபன் பிளமிங் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே மிடில் ஆர்டரில் டிவால்ட் பிரிவிஸ் இருக்கும் பொழுது அந்த அணி மிகவும் வலிமையானதாக இருக்கும். மேலும் தனி ஒருவராக அவர் போட்டியை வென்று கொடுக்கக் கூடிய திறமை படைத்தவர்.

- Advertisement -

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக 250 ரன்கள் துரத்தியபோது சிஎஸ்கே டாப் ஆர்டர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். ஆனாலும் சிஎஸ்கே அணி தாக்குப்பிடித்து 207 ரன்கள் எடுத்தது. எனவே அவர் திரும்பி வந்தால் சிஎஸ்கே வலிமை ஆகிவிடும்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் பேசும்போது ” எங்களுக்கு டிவால்ட் பிரிவிஸ் மிகவும் முக்கியமான வீரர். அவர் இல்லாதது எங்களுக்கு முதுகெலும்பு இல்லாதது போல ஆகிவிட்டது. அவர் அடுத்த போட்டிக்கு திரும்பி வந்து விடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால், அவர் விஷயத்தில் நடக்க கூடியது எல்லாம் தொடர்ந்து சரியாக நடந்து அவர் வருவார் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles