வீட்டுக்கு எங்களை சீக்கிரமா அனுப்பனும்னு ஐசிசி திட்டம் போட்டுருக்கு.. இதெல்லாம் நியாயமே இல்ல.. சிஎஸ்கே வீரர் வேதனை

அமெரிக்காவில் தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

அந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்த போட்டியின் மூலம் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, சர்வதேச கிரிக்கெட்டிலும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டிலும் தங்களது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இலங்கை அணி இரண்டாவது மோசமான சாதனையை படைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை அணி விளையாடும் போட்டிகளை வடிவமைத்த விதம் நியாயமற்ற முறையில் இருப்பதாக சிஎஸ்கே வீரரும், இலங்கை அணி வீரர் தீக்ஷானா தெரிவித்துள்ளார். அதாவது நியூயார்க் நகரத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக டாலஸ் நகரில் விளையாட உள்ளது.

அங்கிருந்து லாடர்கில் நகரில் நேபாளத்துக்கு எதிராக விளையாட உள்ள இலங்கை அணி, கடைசியாக நெதர்லாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லூசியா நகரத்தில் விளையாட உள்ளது. இப்படி நான்கு வெவ்வேறு மைதானங்களில் நான்கு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அந்த ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி தங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியவில்லை என்று தீக்ஷானா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இப்படி நான்கு போட்டிகளையும் வெவ்வேறு மைதானங்களில் வைத்தால் சூழ்நிலைகளை உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் தோல்வியடைந்து நாங்கள் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான் என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“நாலு போட்டிகளையும் நாங்கள் நான்கு மைதானங்களில் விளையாடுவது என்பது நியாயமற்றது. நாங்கள் ஃப்ளோரிடா மற்றும் மியாமி நகரிலிருந்து விமானத்தை பிடிக்க 8 மணி நேரம் காத்திருந்தோம்.

இதையும் படிங்க:இந்த சிஎஸ்கே ஆல்ரவுண்டர் எனக்கு வேண்டாம்.. ஃபார்ம் அவுட்ல இருக்கிற இவரை கொடுங்க.. ஸ்ரீசாந்தின் தரமான பிளேயிங் லெவன்

இங்கிருந்து நாங்கள் எட்டு மணிக்கு செல்ல வேண்டும். ஆனால் விமானம் எங்களுக்கு ஆறு மணிக்கே உள்ளது. இது எங்களுக்கு நியாயமே இல்லை. இதனால் அங்குள்ள சூழ்நிலைகளை எங்களால் உடனடியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வர எங்களுக்கு 1.40 மணி நேரம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் காலை 5:00 மணிக்கே எழுந்து கிளம்ப வேண்டி இருக்கிறது. இருப்பினும் விளையாடும் போது அதெல்லாம் முக்கியமில்லை” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles