இந்த சிஎஸ்கே ஆல்ரவுண்டர் எனக்கு வேண்டாம்.. ஃபார்ம் அவுட்ல இருக்கிற இவரை கொடுங்க.. ஸ்ரீசாந்தின் தரமான பிளேயிங் லெவன்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணி தனது முதல் போட்டியாக நாளை அயர்லாந்து அணியுடன் எதிர்கொள்கிறது.

- Advertisement -

இதற்காக தன்னுடைய பிளேயிங் லெவன் அணியை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்காவில் நாளை நியூயார்க் நகரத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் உலகக்கோப்பை டி20 போட்டியில் மோத உள்ளன.

- Advertisement -

பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில், ஸ்ரீசாந்த் இடது கை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். மேலும் விராட் கோலி மூன்றாம் வரிசையிலும் சூரியகுமார் யாதவ் நான்காம் வரிசையிலும் களம் இறங்கும்படி அணியை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அதற்குப் பிறகு ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களாக களம் இறங்குகிறார்கள். பந்துவீச்சினைப் பொறுத்தவரை பும்ரா, குல்தீப் யாதவ் அர்ஸ்தீப் சிங் மற்றும் சாகல் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர் அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களும் இடம்பெற்று இருக்கின்றனர்.

கூடுதலாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பந்து வீசும் வரிசையில் இடம் பெறுகின்றனர். இந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபேவுக்கு இடம் கொடுக்காமல், ஹர்திக் பாண்டியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை எடுத்து இருக்கிறார். ஹர்திக் பாண்டியா சமீபத்தில் ஐபிஎல் தொடரில் மிக மோசமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பார்மை வெளிப்படுத்தினார். இருப்பினும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இடது கை பேட்ஸ்மேன் கண்டிப்பாக வேண்டும் என ஜெய்ஸ்வாலை களமிறக்கி இருக்கிறார். மேலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெறுகின்றனர். ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியால் இந்திய அணி பலவீனமாகிறது.. ஆஸ்திரேலிய அணியின் வசதி நம்மிடம் இல்லை.. இர்பான் பதான் பேட்டி

நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக்கோப்பை டி20 போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் உத்தேசப் பிளேயிங் லெவனை ஸ்ரீசாந்த் வெளியிட்டிருக்கிறார். இந்திய அணியின் உத்தேச பேயின் லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் சாகல்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles