கதற கதற.. பஞ்சாப் அணியை அலறவிட்ட அபிஷேக் சர்மா.. கண்ணீர் வராத குறையாக நின்ற பிரீத்தி ஜிந்தா

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதற்கேற்ப தொடக்கம் முதலே சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசிய பஞ்சப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களை விளாசியது. 

- Advertisement -

அதிரடியாக ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்களையும், ஸ்டாட்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்களையும் விளாசினர். இதன்பின் ஐதராபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. யான்சன் வீசிய 2வது ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசி அபிஷேக் சர்மா மாஸாக தொடங்கினார்.

- Advertisement -

விளாசிய ஐதராபாத் அணி

பின் 3வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, யாஷ் தாக்கூர் வீசிய 4வது ஓவரில் 20 ரன்களை விளாசி இருவரும் அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 4 ஓவர்களிலேயே ஐதராபாத் அணியின் ஸ்கோர் 60 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடி காட்டியதால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 83 ரன்களாக உயர்ந்தது.

- Advertisement -

இதன்பின் அபிஷேக் சர்மா ஒவ்வொரு ஓவரிலும் சிக்சராக விளாச, மறுபக்கம் டிராவிஸ் ஹெட் மேக்ஸ்வெல்லை பொளந்து கட்டினார். இதனால் 10 ஓவர்களில் ஐதராபாத் ஸ்கோர் 143 ரன்களாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் சதத்தை விளாசி தள்ளினார்.

சாதித்த அபிஷேக் சர்மா

இதனிடையே அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, உடனடியாக கிளாசன் களமிறக்கப்பட்டார். அப்போது ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது சாஹல் வீசிய ஒரே ஓவரில் 19 ரன்களை விளாச, ஐதராபாத் ரசிகர்கள் கரகோஷம் வானத்தை தொட்டது.

- Advertisement -

சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 10 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் கிளாசன் – இஷான் கிஷன் கூட்டணி இணைந்து 18.3 ஓவர்களில் 247 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles