இந்திய அணி அடிச்ச 219 ரன் சின்ன ஸ்கோர் தான்.. நாங்க தோத்த காரணமே வேற – தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேட்டி

இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளை கொண்ட t20 யை தொடரானது சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு அணிகளும் 1-1 எந்த கணக்கில் சமநிலையில் இருப்பதால், மூன்றாவது தொடரே யார் வெல்ல போவது என்ற பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

- Advertisement -

இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியானது திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 216 என்ற இலக்கை நிர்ணயித்தது.

- Advertisement -

217 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சவுத் ஆப்பிரிக்கா அணியானது போராடி 208 எந்த ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் மூலம், இந்திய அணியானது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

போட்டி முடிவில் பேசிய சவுத் ஆப்பிரிக்காவின் கேப்டனான எய்டன் மார்க்ரம், இந்திய அணியின் திலக் வர்மாவின் சதத்தையும் மற்றும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளையும் பாராட்டிவிட்டு, மூன்றாவது மற்றும் கடைசி போட்டிக்காக நாங்கள் எங்களை எந்த இடத்தில் (பேட்டிங், பில்டிங், பவுலிங்) மேம்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சவுத் ஆப்பிரிக்காவின் கேப்டனின் கருத்து:

சவுத் ஆப்பிரிக்காவின் கேப்டனான எய்டன் மார்க்ரம் கூறியதாவது, “எங்கள் அணியானது போட்டியின் கடைசிவரை முயற்சி எடுத்ததில் நான் பெருமைப்படுகிறேன். கீழ் வரிசை வீரர்களின் பேட்டிங்கில், சிறந்த பங்களிப்பை கண்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் இந்தப் போட்டியை திட்டமிட்ட படியே செயல்படுத்தினோம்.

- Advertisement -

220 ரன்களை நீங்கள் எடுக்கும் அளவுக்கு இந்த மைதானம் ஏற்றது தான். ஒவ்வொரு ஓவர்களுமே ஒரு போட்டிக்கு அவசியம், அந்த ஓவர்கள் நாம் நினைத்தபடி அமைந்துவிட்டால், போட்டியின் இறுதியில் வெற்றிக்கனியை நாம் ருசிக்கலாம்.

பேட்டிங், பில்டிங், பவுலிங் போன்ற பகுதிகளில் எந்த இடத்தை நாங்கள் மேம்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்றாம் மற்றும் கடைசி நாள் t20 யை போட்டியானது நாளை இரவு 8:30 மணிக்கு வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles