இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லைனு தானே சொன்னீங்க.. இப்போ என்ன ஆச்சு.. ஜெய்ஷா மீது கோபத்தில் பிரீத்தி ஜிந்தா

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டிகளில் வெற்றியும், எட்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் அணி இனி வரும் இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றியைப் பெற்றாவது புள்ளி பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்களின் விலகல் தற்போது அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ப்ரீத்தி ஜிந்தா பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கும் சமயத்தில் பிசிசிஐயிடம் அனைத்து அணிகளும் உத்திரவாதம் கேட்டன. டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் ஐபிஎல்-லை விட்டு விலகக் கூடாது என்று கேட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த பிசிசிஐ அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அனைத்து வீரர்களும் விளையாடுவார்கள் என்று திட்டவட்டமாக உறுதி அளித்தது.

- Advertisement -

ஆனால் உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் அனைத்து வீரர்களும் தற்போது ஐபிஎல்லில் இருந்து விலகி தாயகம் திரும்ப தயாராகி வருகின்றனர். இதில் முக்கியமாக பெரிய அடி வாங்கி இருப்பது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் ஷாம் கரண், ஆல் ரவுண்டர் லியம் லிவ்ங்ஸ்டன் மற்றும் கிரிஸ் வோக்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ராபாடா ஆகியோர் விலக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் காயம் காரணமாக கேப்டனாக இருந்த சிகார் தவானும் தற்போது விலகி இருப்பதால் எஞ்சிய வீரர்களை வைத்து விளையாடுவதே பஞ்சாப் அணிக்கு தற்போது பெரிய சிக்கலாகி உள்ளது. இவர்கள் அனைவரும் மே 19ஆம் தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் பாதி அணிக்கு மேல் வெளியேறுவதால் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து விளையாடும் நிலைக்கு பஞ்சாப் தற்போது தள்ளப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளிவருகிறது.

இதையும் படிங்க:இந்த தடவையும் டி20 உலக கோப்பை டவுட் தான்.. பிசிசிஐ இவங்கள பார்த்து திருந்துங்க.. கூறுகிறார் ஹர்பஜன் சிங்

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவான வீரர்களை வைத்துள்ள பஞ்சாப் அணிக்கு வெற்றி மட்டும் அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. கிட்டத்தட்ட நான்கு போட்டிகளில் இறுதி வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் அணியை சரியான வழிநடத்த கேப்டன் இல்லாததால் தற்போது எட்டு தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles