டேவிட் மில்லர் என்ன மாதிரி மனுஷன்.. அவர் அந்த ரன்னை எடுக்காதப்ப அதைத்தான் உண்மையா நினைச்சேன் – சுப்மன் கில் பேச்சு

நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் டேவிட் மில்லர் 2 பந்துக்கு 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில், இருபதாவது ஓவரில் ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டார். இதுகுறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த பரபரப்பான கட்டத்தில் டேவிட் மில்லர் ஐந்தாவது பந்தில் சிங்கிள் ரன் எடுத்திருக்க வேண்டும். கடைசிப் பந்தில் குல்தீப் யாதவ் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்து இருந்தால் கூட போட்டி டிராவில் இருந்து சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். ஆனால் இந்த அருமையான வாய்ப்பை டேவிட் மெல்ல ஏன் தவறவிட்டார்? என யாருக்குமே இதுவரையில் புரியவில்லை.

- Advertisement -

இது குறித்து சுப்மன் கில் பேசும்போது “நாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளுமே இருபதாவது ஓவர் வரை சென்றிருக்கின்றது. நல்ல வேளையாக இந்த போட்டிகள் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். டேவிட் மில்லர் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுக்காமல் விட்டபோது இன்னும் இந்த போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த ஆடுகளத்தில் வேகமாக வீசுவதை விட மெதுவாக வீசினால் தான் பவுண்டரி அடிப்பது கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே பிரசித் கிருஷ்ணாவிடம் மெதுவாக பந்தை வீசும் படி நான் கூறினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles